இந்தோனேசியாவின் கிழக்கு பிராந்தியமான பப்புவாவில் நேற்று பூகம்பம் ஏற்பட்டது. ஜெயபுரா நகருக்கு தென்மேற்கே கடலுக்கடியில் 22 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த பூகம்பம் ரிச்டர் அளவில் 5.2 ஆக பதிவாகியிருந்தது.
இந்த பூகம்பம் காரணமாக, கடற்கரையை ஒட்டி இருந்த ஒரு ஹோட்டல் இடிந்து கடலில் விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். சிலர் காயமடைந்தனர்.
மேலும் சில கட்டிடங்களும் சேதமடைந்துள்ளன. மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.