Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பரீட்சை முடிவுகள் என்பது வாழ்க்கையின் முடிவல்ல | மாணவர்களுக்கு இந்திய பிரதமர் மோடி அறிவுரை

January 27, 2023
in News, World, முக்கிய செய்திகள்
0
3 வேளாண் சட்டங்களும் வாபஸ் | பிரதமர் மோடி திடீர் அறிவிப்பு

பரீட்சைமுடிவுகள் என்பது வாழ்க்கையின் முடிவல்ல என்று ’ பரீட்சையும் தெளிவும்’ நிகழ்ச்சியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். மாணவர்களின் பரீட்சை பயத்தை போக்கும் வகையில் அவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடும், உலகின் மிகப் பெரிய பரீட்சை திருவிழாவான ‘பரீட்சையும் தெளிவும் – பரீட்சையை பற்றி விவாதிப்போம்’ நிகழ்ச்சி இன்று (ஜன 27-ம் தேதி) நடைபெற்றது.

டெல்லி தல்கோத்ரா மைதானத்தில் இருந்து இந்திய பிரதமர் மோடி, உலகம் முழுவதும் உள்ள 150-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 50 இலட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் உள்ளிட்டோரின் கேள்விகள், சந்தேகங்களுக்கு காணொளி வாயிலாக பதில் அளிக்கிறார்.

இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் கேட்ட கேள்விகளும் பிரதமரின் பதில்களும் பற்றிய தொகுப்பு:

கேள்வி: எனது பரீட்சை முடிவுகள் நன்றாக இல்லை என்றால் என் குடும்பத்தை நான் எப்படி எதிர்கொள்வது?

பிரதமர் பதில் : குடும்பத்தினரின் எதிர்பார்ப்பு இயல்பானதுதான். ஆனால் மாணவரின் பரீட்சை வெற்றியை ஒரு குடும்பம் சமூக அந்தஸ்தாக கருதினால் அது ஆரோக்கியமானது அல்ல.

கேள்வி : பரீட்சைக்கு தயாராகும்போது எங்கு தொடங்குவது என்பதே குழப்பமாக இருக்கிறது. நேர மேலாண்மை கடினமாக இருக்கிறது. அதை எப்படி கையாள்வது?

பிரதமர் பதில் : நேர மேலாண்மை என்பது பரீட்சைக்கு மட்டுமல்ல உங்கள் அன்றாட வாழ்வுக்கே முக்கியமானது. அதனால் உங்கள் வேலைகளில் எது முக்கியமானது என்று வரிசைப்படுத்துங்கள். உங்கள் வீட்டில் உங்கள் தாயார் எப்படி நேர மேலாண்மை செய்கிறார் என்று கண்காணியுங்கள். அவர்களிடமிருந்தே நீங்கள் உங்கள் பாடத்திற்கு நேர மேலாண்மையை கற்றுக் கொள்ளலாம்.

கேள்வி: பரீட்சையில் காப்பியடித்தல் போன்ற தவறுகளைத் தவிர்ப்பது எப்படி?

பிரதமர் பதில்: சிலர் ஏமாற்றுவதற்கே நூதன முறைகளைக் கண்டுபிடிக்கின்றனர். ஆனால் அதே மாணவர்கள் தங்களின் நேரத்தையும், ஆக்க சக்தியையும் நல்ல விதத்தில் பயன்படுத்தினாலே வெற்றி வரும். ஏமாற்றும் மாணவர்களால் பாதிக்கப்படுவது கடினமாக உழைக்கும் மாணவர்கள்தான். அதனால் கடினமாக உழைக்கும் மாணவர்கள் யாரும் ஏமாற்றுபவர்களை பார்த்து பாதையை மாற்ற வேண்டாம். உங்கள் வலிமை உங்களை முன்னேற்றும் என்று உறுதியாகக் கூறுகிறேன்.

கேள்வி: கடின உழைப்பு, சாமர்த்தியமான உழைப்பு இதில் எது சிறந்தது?

பிரதமர் பதில்: நீங்கள் தாகம் நிறைந்த காகம் பற்றிய கதையைக் கேட்டிருப்பீர்கள்தானே. அந்தக் காகம் தாகத்தைப் போக்க மேற்கொண்ட முயற்சியை கடின உழைப்பு என்பீர்களா அல்லது சாமர்த்தியம் என்பீர்களா? சிலர் கடினமாக உழைப்பீர்கள். சிலர் சாமர்த்தியாக உழைப்பார்கள். ஆனால் சிலர் ஏதும் செய்ய மாட்டார்கள். தேர்வு நேரத்தில் நீங்கள் கடின உழைப்பை செலுத்தினால் நிச்சயமாக அது உங்களுக்கு பலன் தரும்.

கேள்வி: நான் ஒரு சராசரி மாணவர்? நான் எப்படி என் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும்?

பிரதமர் பதில்: நீங்கள் ஒரு சராசரி மாணவர் என்பதை தெரிந்து வைத்துள்ளதற்கு வாழ்த்துகள். நிறைய மாணவர்கள் தங்களைத் தாங்களே கூட்டி மதிப்பிட்டு வைத்திருப்பார்கள். நம்மை நாம் அறிந்திருந்தால் போதும் அசாத்தியமான செயல்களைக் கூட முயன்று சாதிக்கலாம்.

கேள்வி: எதிர் தரப்பினரின் விமர்சனங்களை எப்படி எதிர்கொள்வது?

பிரதமர் பதில்: விமர்சனங்கள் என்பது ஜனநாயகத்தின் அடிநாதம். அதுவே வெற்றிகரமான ஜனநாயகத்திற்கு வழி.

கேள்வி: பரீட்சை வேளைகளில் எப்படி சமூக ஊடகங்கள், இணைய விளையாட்டுகளில் இருந்து ஒதுங்கி இருப்பது?

பிரதமர் பதில்: முதலில் நீங்கள் சாமர்த்தியமானவரா அல்லது கேட்ஜட் சாமர்த்தியமானதா என்று முடிவு செய்யுங்கள். மின்னணு சாதனங்கள் உங்களைவிட ஸ்மார்ட் ஆனவை அல்ல என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். எப்போதுமே மின்னணு சாதனங்கள், தொழில்நுட்பங்களுக்கு நாம் அடிமையாகிவிடக் கூடாது.

இவ்வாறு பிரதமர் மோடி, மாணவர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

Previous Post

யாழில். இராணுவ வாகனம் மோதி விபத்து | ஒருவர் உயிரிழப்பு

Next Post

சீன அவுஸ்திரேலிய உறவுகள் சரியான திசையில் செல்கின்றன | சீன ஜனாதிபதி

Next Post
சீன அவுஸ்திரேலிய உறவுகள் சரியான திசையில் செல்கின்றன | சீன ஜனாதிபதி

சீன அவுஸ்திரேலிய உறவுகள் சரியான திசையில் செல்கின்றன | சீன ஜனாதிபதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

June 30, 2026
பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

June 30, 2026
ஷியாமலா பெரேராவுக்கு பிணை 

ஷியாமலா பெரேராவுக்கு பிணை 

June 30, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

கொத்துரொட்டி உணவக உரிமையாளர் பிணையில் விடுதலை

June 30, 2026

Recent News

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

June 30, 2026
பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

June 30, 2026
ஷியாமலா பெரேராவுக்கு பிணை 

ஷியாமலா பெரேராவுக்கு பிணை 

June 30, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

கொத்துரொட்டி உணவக உரிமையாளர் பிணையில் விடுதலை

June 30, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures