Wednesday, September 10, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தேசிய தினமா ஆக்கிரமிப்பு தினமா பிளவுபட்டு நிற்கும் அவுஸ்திரேலியா

January 26, 2023
in News, World, முக்கிய செய்திகள்
0
தேசிய தினமா ஆக்கிரமிப்பு தினமா பிளவுபட்டு நிற்கும் அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவின் பலநகரங்களில் இடம்பெற்ற படையெடுப்பு நாள் ஆர்ப்பாட்டங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டுள்ளனர்.

அவுஸ்திரேலியாவின் தேசிய தினத்தை படையெடுப்பு தினமாக கருதி பல நகரங்களில் மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

1788 இல் சிட்னிகோவில் குற்றவாளிகளுடன் பிரிட்டிஸ் கடற்படையினர் முதன்முதலில் தரையிறங்கிய நாளே – ஜனவரி 26 அவுஸ்திரேலிய தினமாக நினைவுகூறப்படுகின்றது.

இதுவே அவுஸ்திரேலியாவில் ஐரோப்பிய குடியேற்றத்தை ஆரம்பித்து வைத்தது.

இந்த தினத்தை ஆக்கிரமிப்பு தினம் என தெரிவித்து இன்று ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்;றுள்ளன

அவுஸ்திரேலியாவின் காலனித்துவ வரலாறு குறித்து கடும் விவாதங்களும் அரசியல் சர்ச்சைகளும் இடம்பெற்று வரும் நிலையில் இந்த ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

நாங்கள் பொய்சொல்வதை நிறுத்தவேண்டும் என பேராசிரியர் மார்சியா லாங்டொன் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் தேசிய தினம் குடியேற்றத்தை கொண்டாடுவதாக காணப்படக்கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய தினம் என்பதே மிகப்பெரிய பொய் என குறிப்பிட்டுள்ள அவர் நாங்கள் பொருத்தமான தினத்தை கண்டுபிடிக்கவேண்டும் அதன் பின்னர் நாங்கள் அவுஸ்திரேலிய வரலாறு குறித்த உண்மையை தெரிவிக்க ஆரம்பிக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதன் பின்னர் நாங்கள் அவுஸ்திரேலிய பூர்வீக குடிகளிற்கும் பூர்வீககுடிகள் அல்லாதவர்களிற்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களில் உயிர்பிழைத்தவர்களிற்கு ஒரு மரியாதையை வழங்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.

19ம் நூற்றாண்டிலிருந்து இந்த தினம் அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன் 1994 முதல் அவுஸ்திரேலிய தினம்

பொதுவிடுமுறை தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது .

மேலும் பூர்வீககுடிகளை திட்டமிட்டு அகற்றியது பிரிட்டிஸ் குடியேற்றங்களிற்காக இடம்பெற்ற இனப்படுகொலை பூர்வீககுடிகள் தொடர்ச்சியாக எதிர்கொண்ட புறக்கணிப்புகள் போன்றவை குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு அதிகரித்துள்ளமை இந்த தினத்தை இரண்டு வகையான மனோநிலையுடன் கடைப்பிடிக்கப்படும் நாளாக மாற்றியுள்ளது.

கடந்தகாலங்களில் 26ம் திகதி கொடி பட்டாசுகள் வாணவேடிக்கை போன்றவற்றுடன் கடைப்பிடிக்கப்பட்டுள்ள போதிலும் அந்த நிலை மாறி ஆர்ப்பாட்டங்களை மையப்படுத்தியதாக இந்த நாள் மாறியுள்ளது.

இந்த தினத்தை மாற்றவேண்டும் என்பதற்கான பரப்புரைகளில் அதிகளவான அவுஸ்திரேலியர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.

இன்றைய தினம் வெள்ளை அவுஸ்திரேலியாவை அங்கீகரித்த தினம் என சிட்னியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் விராட்ஜூரி சமூகத்தை சேர்ந்த பெண்ணொருவர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் எங்களை முற்றாக அழிக்க முயன்றார்கள் நாங்கள் இன்னமும் இங்கிருக்கின்றோம்,அவர்கள் எங்கள் மீது இனப்படுகொலைகளில் ஈடுபட முயன்றார்கள் நாங்கள் இங்கிருக்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய தினத்தை வேறு திகதிக்கு மாற்றுவதற்கான யோசனை எதுவும் முன்வைக்கப்படவில்லை என பிரதமர் அன்டனி அல்பெனிஸ் தெரிவித்துள்ளார்.

எனினும் கார்டியன் நடத்திய கருத்துக்கணிப்பு 23வீதமானவர்கள் திகதி மாற்றத்தை ஆதரிப்பதை வெளிப்படுத்தியுள்ளன.

Previous Post

தென்னாபிரிக்காவுடனான பரபரப்பான போட்டியில் 2 ஓட்டங்களால் வெற்றியை தவறவிட்ட இலங்கை

Next Post

கல்லூரி காலத்தை நினைவூட்டும் ‘எங்க ஹாஸ்டல்’ வலைத்தள தொடர்

Next Post
கல்லூரி காலத்தை நினைவூட்டும் ‘எங்க ஹாஸ்டல்’ வலைத்தள தொடர்

கல்லூரி காலத்தை நினைவூட்டும் 'எங்க ஹாஸ்டல்' வலைத்தள தொடர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures