நடிகை பிரியாமணி கதையின் நாயகியாக முக்கியமான வேடத்தில் நடித்திருக்கும் ‘கொட்டேஷன் கேங்’ எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் விவேக் கே. கண்ணன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் ‘கொட்டேஷன் கேங்’. இதில் பொலிவுட் நடிகர்கள் ஜேக்கி ஷெராப், சன்னி லியோன், அஷ்ரப் மல்லிசேரி, பிரியாமணி, சாரா அர்ஜுன், ஜெயப்பிரகாஷ், அக்ஷயா, பிரதீப்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
அருண் பத்மநாபன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ட்ரம்ஸ் சிவமணி இசையமைத்திருக்கிறார். பிலிமினாட்டி என்டர்டெய்ன்மென்ட் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் காயத்ரி சுரேஷ் மற்றும் விவேக் கே. கண்ணன் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” காஷ்மீர், மும்பை, சென்னை ஆகிய மூன்று இடங்களை இணைக்கும் வகையில் ஹைப்பர் லிங்க் பாணியில் கிரைம் திரில்லர் ஜேனரில் இந்த திரைப்படம் உருவாகி இருக்கிறது. தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது ‘ என்றார்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. டீசரில் கல்ட் கிரைம் திரில்லர் ஜேனரிலான காட்சிகள் இடம் பெற்றிருப்பதால் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.