‘பொன்னியின் செல்வன் 1’ படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் விக்ரம் பிரபு கதையின் நாயகர்களில் ஒருவராக நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘இறுகப்பற்று’ என பெயரிடப்பட்டிருக்கிறது என படக் குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.
‘பட்டாபட்டி’, ‘எலி’, ‘தெனாலிராமன்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் யுவராஜ் தயாளன் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் ‘இறுகப்பற்று’.
இதில் விக்ரம் பிரபு கதையின் நாயகர்களில் ஒருவராக நடிக்க, அவருக்கு ஜோடியாக ‘விக்ரம் வேதா’ படப்புகழ் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார். இவர்களுடன் விதார்த், ஸ்ரீ, சானியா ஐயப்பன், அபர்னதி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். மூன்று தம்பதிகளின் வாழ்வியலில் நடைபெறும் யதார்த்த சம்பவங்களை மையப்படுத்தி தயாராகும் இந்த திரைப்படத்தை பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் எஸ் ஆர் பிரகாஷ் பாபு, எஸ் ஆர் பிரபு ஆகியோர் தயாரிக்கிறார்கள். நேரடியாக நெட்பிக்ஸ் எனும் டிஜிட்டல் தளத்தில் வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.

