வாரிசு
விஜய் நடிப்பில் கடந்த 11ம் தேதி வெளிவந்த திரைப்படம் வாரிசு. முதல் இரண்டு நாட்கள் கலவையான விமர்சனங்களை பெற்று வந்த இப்படம் தற்போது குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.
உலகளவில் பாக்ஸ் ஆபிஸில் சிறந்த வசூலை குவித்து வரும் வாரிசு தமிழகத்தில் இதுவரை ரூ. 63 கோடி வரை வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தில் ராஜு மீது கடுப்பில் விஜய்
இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு மீது நடிகர் விஜய் சற்று கோபத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்க்கு காரணமே வாரிசு படம் தெலுங்கில் தள்ளிப்போனது தானாம்.
தயாரிப்பாளர் தில் ராஜு மீது கடுப்பில் இருக்கும் விஜய்.. இதுதான் காரணமா | Vijay Had Angry With Producer Dil Raju
தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளிலும் 11ம் தேதி தான் வாரிசு படம் வெளியாவதாக இருந்தது. ஆனால், திடீரென சில காரணங்களால் தெலுங்கில் வாரிசு திரைப்படம் இரு நாட்களுக்கு பின் தேதி வெளியாகும் என தில் ராஜு அறிவித்தார்.
இதனால் விஜய் சற்று அதிர்ப்பத்தி அடைந்துவிட்டாராம். இதன் காரணமாகவே தில் ராஜு மீது விஜய்க்கு கோபம் வந்ததாக திரை வட்டாரத்தில் கூறப்படுகிறது.