Thursday, September 11, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பொங்கல் தினத்தில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 8 பேர் உயிரிழப்பு

January 16, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
பொங்கல் தினத்தில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 8 பேர் உயிரிழப்பு

நாட்டின் பல பகுதிகளில் பொங்கல் தினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) இடம்பெற்ற வாகன விபத்துக்களில் இரண்டரை வயது குழந்தை உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ராகலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சமகிபுர பகுதியில் ராகல நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டி வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது முச்சக்கரவண்டியில் பயணித்த சிறுமி மற்றும் குழந்தையும் படுகாயமடைந்த நிலையில் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அதில் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

விபத்து தொடர்பில் முச்சக்கர வண்டியை செலுத்திய 16 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, பெலியத்த பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பெலியத்த திக்வெல்ல வீதியின் மிரிஸ்வத்த பகுதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் வலது பக்கம் திரும்ப முற்பட்ட போது லொறி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் உயிரிழந்தவர் 39 வயதுடைய நபர் பெலியத்த பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவராவார் . லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மேலும் நாவலப்பிட்டியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் இருந்து பாடசாலை மாணவன் ஒருவர் தவறி விழுந்துள்ளார். இதன் போது காயமடைந்த மாணவன் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 16 வயதுடைய உடஹெனெதென்ன பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். விபத்து தொடர்பில் பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை கலென்பிந்துனுவௌ – ஹிம்புதுகெல்லேவ சந்தியில் லொறி ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிள் செலுத்திய நபர் மற்றும் பின்னால் அமர்ந்து பயணித்த மற்றைய நபரும் கலென்பிந்துனுவெ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மோட்டார் சைக்கிள் செலுத்திய நபர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 23 வயதுடைய கலென்பிந்துனுவௌ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவராவார்.

மேலும் பத்தேகம பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நாகொட வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 31 வயதான இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பத்தேகமயில் இருந்து நாகொட நோக்கி பயணித்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் எதிர்திசையில் வந்த கப் ரக வாகனத்துடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

கப் வண்டி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். பத்தேகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்பு – மட்டக்களப்பு வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் ஒன்றும் வேன் ஒன்றும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது . விபத்து தொடர்பில் வேன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் கல்முனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இங்கிரிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட இங்கிரிய – பாதுக்க பிரதான வீதியின் ரைகம்வத்த பிரதேசத்தில் பயணித்த மோட்டார் சைக்கிள் எதிர்திசையில் வந்த வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிள் செலுத்திய நபர், பின்னால் அமர்ந்து பயணித்த மோட்டார் சைக்கிள் செலுத்திய நபரின் மனைவி மற்றும் குழந்தை இங்கிரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மோட்டார் சைக்கிள் செலுத்திய நபர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 35 ஹந்தபான்கொட பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவராவார்.

இதேவேளை காலி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட காலி- பத்தேகம வீதியின் மடவலமுல்ல சந்தியில் பத்தேகம நோக்கிச் சென்ற ஜீப் வண்டியொன்று வீதியின் ஓரத்தில் பயணித்த பாதசாரி ஒருவர் மீது மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

காயமடைந்த நபர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 50 வயதுடைய ஒருவராவார்

Previous Post

வடையில் கரப்பான் பூச்சி | விற்பனை செய்த கடைக்கு தண்டம் அறவீடு

Next Post

உக்ரேனிய சிப்பாயின் நெஞ்சிலிருந்து வெடிக்காத கிரனேட் அகற்றப்பட்டது

Next Post
உக்ரேனிய சிப்பாயின் நெஞ்சிலிருந்து வெடிக்காத கிரனேட் அகற்றப்பட்டது

உக்ரேனிய சிப்பாயின் நெஞ்சிலிருந்து வெடிக்காத கிரனேட் அகற்றப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures