Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யாழில் தேசிய பொங்கல் நிகழ்வில் ஜனாதிபதி கலந்துகொள்வதற்கு யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் எதிர்ப்பு

January 15, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
யாழில் தேசிய பொங்கல் நிகழ்வில் ஜனாதிபதி கலந்துகொள்வதற்கு யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் எதிர்ப்பு

தேசிய பொங்கல் விழாவில் கலந்துகொள்வதற்காக யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து, அமைதிப் போராட்டத்தினை முன்னெடுக்க அனைவரும் ஒன்றிணையுமாறு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது. 

யாழ். பல்கலைக்கழகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (13) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் இதனை கோரியுள்ளனர். 

இதன்போது யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் அழகராசா விஜயகுமார் தெரிவிக்கையில், 

எங்களுடைய தமிழ் மக்கள் வட கிழக்கெங்கிலும் பல்வேறு பிரச்சினைகளுக்குள் சிக்குண்டு, தொடர்ச்சியாக எதுவித அரசியல் தீர்வுகளுமின்றி, நாட்களை கழித்துவரும் நிலையில் காணாமலாக்கப்பட்டோர் மற்றும் அரசியல் கைதிகள் தொடர்பான விடயங்கள், காணி விடுவிப்பு, இராணுவ ஆக்கிரமிப்பு, பௌத்தமயமாக்கல் என அரசின்  திட்டமிடப்பட்ட இனப்பிரச்சினைகளுக்குள் இருந்து மக்கள் இதுவரை வெளிவராத சூழ்நிலையில், தேசிய பொங்கல் விழாவினை ஜனாதிபதி எவ்வாறான மனநிலையில் யாழ்ப்பாணத்தில் நிகழ்த்த முடியும் ?

ஜனாதிபதி பொங்கல் விழாவை  மேற்கொள்வதில் எங்களுக்கு எதுவித ஆட்சேபனையும் கிடையாது. தமிழர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வினை வழங்கிய பின்னர் அவர் குறித்த பொங்கல் நிகழ்வினை முன்னெடுப்பாராயின், தமிழ் மக்களாகிய நாங்களும் இணைந்துகொள்வோம்.

நாளை ஞாயிற்றுக்கிழமை (ஜன. 15) 3 மணியளவில் ஜனாதிபதி கலந்துகொள்ளும் பொங்கல் நிகழ்வு நல்லூர் சிவன் ஆலயத்தில் இடம்பெற இருக்கின்ற தருணத்தில், ஒரு மணியளவில் யாழ். பல்கலைக்கழக முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பமாகி, தொடர்ச்சியாக பொங்கல் நிகழ்வு இடம்பெறும்  இடத்துக்கு செல்வதோடு நிறைவடையும்.

அதேவேளை மக்கள் பிரதிநிதிகள், கட்சித் தலைமைகள் அரசியல் பேதமின்றி இந்த பொங்கல் நிகழ்வை முற்றாக நிராகரிப்பதோடு, எங்களுடைய இந்த சாத்வீக போராட்டத்தில் பங்குகொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கிறோம்.

அத்தோடு அனைத்து சிவில் அமைப்புக்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரையும் இந்த போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கிறோம் என மேலும் தெரிவித்தார்.

Previous Post

பிலிப்பைன்ஸில் இறைச்சியைவிட வெங்காயத்தின் விலை அதிகரிப்பு

Next Post

வாளை காட்டி மிரட்டி மோட்டார் சைக்கிள் பறிப்பு

Next Post
வீட்டில் கொள்ளையிடச் சென்றவர் பொதுமக்களின் தாக்குதலில் உயிரிழப்பு

வாளை காட்டி மிரட்டி மோட்டார் சைக்கிள் பறிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

June 30, 2026
பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

June 30, 2026
ஷியாமலா பெரேராவுக்கு பிணை 

ஷியாமலா பெரேராவுக்கு பிணை 

June 30, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

கொத்துரொட்டி உணவக உரிமையாளர் பிணையில் விடுதலை

June 30, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures