கடந்த டிசம்பர் மாதம் 18 ஆம் திகதியன்று நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை இம்மாதத்திற்குள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்போது பரீட்சை விடைத்தாள்களை மதிப்பிடும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இம்முறை 334,698 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர் எனவும் இன்னும் இரண்டு நாட்களில் மதிப்பீட்டுப் பணிகள் நிறைவடையும் எனவும் இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.