பெண் பயணி மீது சிறுநீர் கழித்த ஆண்: நியூயோர்க் – டெல்லி விமானத்தில் சம்பவம்
நியூயோர்க்கிலிருந்து டெல்லி நோக்கி பறந்துகொண்டிருந்த விமானத்தில் பெண்ணொருவர் மீது ஆணொருவர் மீது சிறுநீர் கழித்த சம்பவம் சர்ச்சையை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த நவம்பர் 26 ஆம் திகதி, அமெரிக்காவின் நியூயோர்க்கிலிருந்து இந்தியாவின் டெல்லி நகரை நோக்கி பறந்துகொண்டிருந்த எயார் இந்தியா விமானத்தின் வர்த்தக வகுப்பில் இச்சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுபோதையிலிருந்த ஆண் பயணியொருவர், தனது காற்சட்டை ஸிப்பை திறந்துவிட்டு பெண்ணொருவர் மீது சிறுநீர் கழித்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி ஆண் பயணியை கைது செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக டெல்லி பொலிஸார் நேற்று புதன்கிழமை தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் மும்பையைச் சேர்ந்தவர் எனவும் எனினும், அவர் வேறு சில மாநிலங்களில் தங்கியிருக்ககூடும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பயணி தனது விமானங்களில் பறப்பதற்கு 30 நாட்களுக்குத் தடை விதித்துள்ளதாக எயார் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, மேற்படி சம்பவம் குறித்து இந்திய சிவில் விமானப்போக்குவரத்துப் பணியகமும் விசாரணையை ஆரம்பித்துள்ளது.