ரஷ்யாவிலிருந்து மத்தளவுக்கு மற்றுமொரு விமான சேவை ஆரம்பிக்கப்படும் என ரஷ்யாவிலுள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.
இந்தப் புதிய விமான சேவை எதிர்வரும் 28ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக குறித்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான இந்த புதிய விமான சேவைகளை ரஷ்யாவின் ரெட் விங்ஸ் (Red Wings) ஏர்லைன்ஸ் நிறுவனம் ஆரம்பிக்கவுள்ளது.
மொஸ்கோவிலிருந்து மத்தள சர்வதேச விமான நிலையத்துக்கு வாரம் இருமுறை விமானங்களை இயக்குவதற்கு சம்பந்தப்பட்ட விமான நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்த புதிய விமான சேவை ஆரம்பிக்கப்படுவதன் மூலம் இலங்கைக்கும் ரஷ்யாவுக்குமிடையில் 3 நேரடி விமான சேவைகள் இடம்பெறவுள்ளன.

