ஆர்ஜென்டினா கால்பந்தாட்ட அணி தலைவர் மெஸ்ஸிக்கு, இந்திய ரசிகர்களினால் ஆழ்கடலில் கட்-அவுட் வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கட்-அவுட் வைக்கும் காணொளி தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
அதிக கோல்களை அடித்த வீரர்
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ் மற்றும் ஆர்ஜென்டினா அணிகள் கோதாவில் நேருக்கு நேர் மோதவுள்ளன.
இதேவேளை 2022 உலகக் கிண்ண இறுதிப்போட்டியே தனது கடைசி உலகக் கிண்ணப் போட்டியாக அமையும் என ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட வீரர் லியோனல் மெஸ்ஸி தெரிவித்துள்ளார்.
மேலும் தனது 5 ஆவது உலகக்கிண்ண சுற்றுப்போட்டியில் விளையாடும் மெஸ்ஸி, இதுவரை 11 கோல்களை அடித்து ஆர்ஜென்டீனாவுக்காக உலகக் கிண்ணப் போட்டிகளில் அதிக கோல்களை அடித்த வீரராகவும் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
வெற்றி பெற வாழ்த்துக்கள்..!
இந்நிலையில் இந்தியாவிலுள்ள யூனியன் பிரதேசங்களில் ஒன்றான லட்சத்தீவின் தலைநகரம் கவரத்தியில் இந்திய ரசிகர்கள் ஆழ்கடலுக்குள் சென்று லயோனல் மெஸ்ஸிக்கு கட்-அவுட் வைத்து, உலக கோப்பை கால்பந்து போட்டியில் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த மெஸ்ஸி ரசிகர்கள் உற்சாகத்தில் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.