Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நாட்டை விட்டு வெளியேறத் துடிக்கும் இலங்கையர்கள் | பகிரங்கமாக அறிவித்தார் ஜனாதிபதி ரணில்

December 16, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபடுவதற்கு அனுமதியுள்ளது | ஜனாதிபதி

நாட்டில் சிறிது காலம் நிலவிய இனக் கலவரத்தால் மக்கள் நாட்டை விட்டு வெளியேறினர். இன்று அப்படிப்பட்ட கலவரங்கள் இல்லாவிட்டாலும் இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள். பெரும்பாலான மக்கள் இங்கு வாழ விரும்பவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மற்றும் நாட்டின் எதிர்காலம் குறித்து, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இளைஞர்கள் குழு ஒன்று அண்மையில் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

எமது பொருளாதாரத்தில் சரிவு ஏற்பட்டுள்ளதை அனைவரும் அறிவோம். இது ஒரு பெரிய நெருக்கடி. நாம் இதிலிருந்து மீள வேண்டும். அப்போதுதான் நாம் பழைய வாழ்க்கை முறைக்குத் திரும்ப முடியும். ஆனால், நாம் இந்த நிலையில் இப்படியே இருக்கப் போகிறோமா? அல்லது இதிலிருந்து மீளப் போகிறோமா என்பதே முதல் கேள்வியாகும்.

புதிய பொருளாதாரத்தை இரண்டு ஆண்டுகளுக்குள் கட்டியெழுப்ப முடியாது. 25 ஆண்டுகளை இலக்காகக் கொண்டு இதனை முன்னெடுக்க வேண்டும்.

நாட்டை விட்டு வெளியேறும் இலங்கையர்கள்

இது பெரியவர்களுக்கான பட்ஜட் அல்ல. பொதுவாக 40 வயதுக்குட்பட்டவர்களுக்கு என்று சொல்ல வேண்டும். இன்று உங்களுக்கு 40 வயது என்றால், உங்களுக்கு 65 வயது ஆகும்போது இந்த இலக்கை அடைய முடியும். இன்று உங்களுக்கு 20 வயது என்றால் 45 வயதாகும் போது இந்த இலக்கை அடைய முடியும்.

அப்போது அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றக் கூடிய பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும். நான் பிறந்தபோது ஆசியாவில் ஜப்பானுக்கு அடுத்தபடியாக வளர்ச்சியடைந்த நாடாக இலங்கை இருந்தது. இன்றைய நிலையில் ஆப்கானிஸ்தான் மட்டுமே நமக்கு கீழே உள்ளது.

இந்தப் பிரச்சினையால் எமது இளைஞர்கள் பலர் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். நாட்டில் சிறிது காலம் நிலவிய இனக் கலவரத்தால் மக்கள் நாட்டை விட்டு வெளியேறினர். இன்று அப்படிப்பட்ட கலவரங்கள் இல்லாவிட்டாலும் இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள்.

பெரும்பாலான மக்கள் இங்கு வாழ விரும்பவில்லை. தற்போதைய அரசியல் அமைப்பில் அவர்களுக்கு திருப்தியில்லை. இந்த முறைமையில் மாற்றம் வரவேண்டும் என்கிறார்கள்.

மேலும் நாம் பொருத்தமான பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும். அதன்படி, அடுத்த 25 ஆண்டுகளில் வலுவான பொருளாதாரத்தை உருவாக்க உள்ளேன்.

ஜப்பான், சீனா, சிங்கப்பூர், கொரியா போன்ற நாடுகளுடன் ஒப்பிடும் வகையில் முன்னேறிச் செல்லக்கூடிய பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும்.

இந்த பட்ஜெட்டில் இருந்து இந்தப் பணி ஆரம்பமாகிறது. ஓகஸ்ட் மாதம் கொண்டுவரப்பட்ட வரவு செலவுத் திட்டம் இந்த நாட்டின் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்துக்கு ஓரளவு ஸ்திரத்தன்மையைக் கொண்டுவந்தது.

2023 ஆம் ஆண்டு முதல் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த, நாங்கள் பணியாற்றி வருகிறோம். இதன்மூலம் புதிய பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

முட்டையின் புதிய அதிகபட்ச நிர்ணய விலைக்கும் எதிர்ப்பு

Next Post

தாய்லாந்து இளவரசி மயங்கி வீழ்ந்ததால் வைத்தியசாலையில் அனுமதி

Next Post
தாய்லாந்து இளவரசி மயங்கி வீழ்ந்ததால் வைத்தியசாலையில் அனுமதி

தாய்லாந்து இளவரசி மயங்கி வீழ்ந்ததால் வைத்தியசாலையில் அனுமதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

June 30, 2026
பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

June 30, 2026
ஷியாமலா பெரேராவுக்கு பிணை 

ஷியாமலா பெரேராவுக்கு பிணை 

June 30, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

கொத்துரொட்டி உணவக உரிமையாளர் பிணையில் விடுதலை

June 30, 2026

Recent News

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

June 30, 2026
பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

June 30, 2026
ஷியாமலா பெரேராவுக்கு பிணை 

ஷியாமலா பெரேராவுக்கு பிணை 

June 30, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

கொத்துரொட்டி உணவக உரிமையாளர் பிணையில் விடுதலை

June 30, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures