Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கிராஞ்சி பகுதி மக்களுக்கு ஆதரவாக யாழில் போராட்டத்திற்கு அழைப்பு

December 15, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
கிராஞ்சி பகுதி மக்களுக்கு ஆதரவாக யாழில் போராட்டத்திற்கு அழைப்பு

கிளிநொச்சி மாவட்ட கிராஞ்சி பகுதி மக்களின் கடலட்டை பண்ணைகளுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவாக தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் டிசம்பர் 16 ம் திகதி வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக போராட்டமொன்று இடம்பெறவுள்ளது.

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக காலை 10 மணிக்கு ஆரம்பிக்கும் போராட்டம் வடமாகாண ஆளுநர் செயலகத்தில் நிறைவடையவுள்ளது.

போராட்ட நிறைவில் வடமாகாண ஆளுநர் செயலகம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, கடற்றொழில் அமைச்சர் ஆகியோருக்கு மகஜர் கையளிக்கப்படவுள்ளது.

போராட்டத்திற்கான அழைப்பை தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் பிரதிநிதிகள் யாழ் ஊடக அமையத்தில் புதன்கிழமை(14) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் விடுத்தனர்.

கிராஞ்சி பகுதி மீனவர்களின் போராட்டத்தை உரிய தரப்பினர் கண்டுகொள்வதாக இல்லை. மக்களின் விருப்புக்கு மாறாக கடலட்டை பண்ணைகளை அமைக்க முடியாது. கடலட்டை பண்ணையை முன்னுரிமைப்படுத்தி அரசாங்கம் செயற்படுகிறது.

இதில் பல்தேசிய கம்பனிகளே நன்மை பெறுகின்றன என தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் ஆ.சதீஸ்வரன் தெரிவித்தார்.

வடமாகாணத்திலுள்ள அனைத்து சிவில்சமூகத்தினரும் அரசியல் தரப்புகளும் பங்கேற்று போராட்டத்திற்கு ஆதரவளித்து பங்கேற்க வேண்டுமென இ.முரளிதரன் அழைப்பு விடுத்தார்.

சிறிய மீனவர்கள் பழிவாங்கப்படுகின்றனர். இந்நிலை தொடர்ந்தால் பாரிய நெருக்கடி நிலை ஏற்படுமென தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் பெனடிக் குரூஸ் தெரிவித்தார்.

அரசாங்கம் தனது இலாபங்களுக்காக கடலட்டை பண்ணையை உருவாக்குகிறது.இதற்காக கடலட்டை பண்ணைக்கு ஆதரவான கருத்தை நக்டா வெளியிடுகிறது.

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் எமது பகுதி வளங்கள் சுரண்டப்படுகிறது. எங்கள் வளங்களை சுரண்டிவிட்டு அரசியல் தீர்வு தந்து பயனில்லை என தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் இன்பம் கருத்து தெரிவித்தார்.

கிராஞ்சி இலவன்குடாவில் சட்டவிரோத கடலட்டை பண்ணைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து 76 நாட்கள் போராட்டம் இடம்பெற்று வருவதாகவும் அரசியல் தரப்புக்கள் கண்டுகொள்வதில்லை ஊடகசந்திப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டது.

Previous Post

நாட்டிற்கு இதுவரை 640,000 சுற்றுலாப் பயணிகள் வருகை

Next Post

தமிழ் மக்களது காணிகளை சுவீகரிக்கிறது சிங்கள தேசம் | சுரேஸ்

Next Post
தமிழ் மக்களது காணிகளை சுவீகரிக்கிறது  சிங்கள தேசம் | சுரேஸ்

தமிழ் மக்களது காணிகளை சுவீகரிக்கிறது சிங்கள தேசம் | சுரேஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

June 30, 2026
பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

June 30, 2026
ஷியாமலா பெரேராவுக்கு பிணை 

ஷியாமலா பெரேராவுக்கு பிணை 

June 30, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

கொத்துரொட்டி உணவக உரிமையாளர் பிணையில் விடுதலை

June 30, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures