Wednesday, September 10, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

சி குழுவில் முதலிடத்தைப் பெற்ற ஆர்ஜன்டீனாவும் நிகர கோல் அடிப்படையில் போலந்தும் 2 ஆம் சுற்றுக்கு தகுதி

December 1, 2022
in News, Sports, முக்கிய செய்திகள்
0
சி குழுவில் முதலிடத்தைப் பெற்ற ஆர்ஜன்டீனாவும் நிகர கோல் அடிப்படையில் போலந்தும் 2 ஆம் சுற்றுக்கு தகுதி

Argentina's midfielder #20 Alexis Mac Allister (top, L) and Poland's defender #15 Kamil Glik (top, R) fight for the ball during the Qatar 2022 World Cup Group C football match between Poland and Argentina at Stadium 974 in Doha on November 30, 2022. (Photo by ANDREJ ISAKOVIC / AFP)

கத்தாரில் நடைபெற்றுவரும் 22ஆவது உலகக் கிண்ண கால்பந்தாட்ட அத்தியாயத்தில் சி குழுவுக்கான ஆரம்பப் போட்டியில் சவூதி அரேபியாவிடம் எதிர்பாராத தோல்வியைத் தழுவிய முன்னாள் உலக சம்பியன் ஆர்ஜன்டீனா, தனது கடைசி லீக் போட்டியில் போலந்தை வெற்றிகொண்டு 16 அணிகள் சுற்றில் விளையாட தகுதிபெற்றது.

ஸ்டேடியம் 974 விளையாட்டரங்கில் புதன்கிழமை இரவு நடைபெற்ற அப் போட்டியில் ஆர்ஜன்டீனாவிடம் 0 – 2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தபோதிலும் போலந்தும் இரண்டாம் சுற்றில் விளையாட தகுதிபெற்றது.

அப் போட்டியில் ஆர்ஜன்டீனாவிடம் 0 – 2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தபோதிலும் போலந்தும் இரண்டாம் சுற்றில் விளையாட தகுதிபெற்றது.

போலந்தும் மெக்சிகோவும் தலா 4 புள்ளகிளைப் பெற்றபோதிலும் நிகர கோல்கள் வித்தியாச அடிப்படையில் மெக்சிகோவின் 2ஆம் சுற்று வாய்ப்பு அற்றுப்போனது.

சவூதி அரேபியாவுடனான தோல்விக்குப் பின்னர் மெக்சிகோவுக்கு எதிராக மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டுவதற்கு பெரும் பங்காற்றிய அணித் தலைவர் லயனல் மெஸி, தீர்மானம் மிக்க பொலந்துடனான போட்டியிலும் சிறப்பாக அணியை வழிநடத்தி வெற்றியில் முக்கிய பங்காற்றியிருந்தார்.

இரண்டு அணிகளும் இப் போட்டியில் மிகத் திறமையாக விளையாடிய போதிலும் முதலாவது ஆட்ட நேர பகுதியில் எந்த அணியம் கோல் போடவில்லை.

ஆனால், இடைவேளை முடிந்து ஆட்டம் தொடர்ந்த முதலாவது நிமிடத்திலேயே ஆர்ஜன்டீனா கோல் போட்டு முன்னிலை அடைந்தது.

நோயல் மொலினா பரிமாறிய பந்தைப் பெற்றுக்கொண்ட அலெக்சிஸ் மெக் அலிஸ்டர், பெனல்டி எல்லையின் மத்தியிலிருந்து கோல் போட்டார்.

இந்த வருட உலகக் கிண்ணப் போட்டியில் போலந்துக்கு எதிராக போடப்பட்ட முதலாவது கொலாக அது அமைந்தது.

அதனைத் தொடர்ந்து கோல் எண்ணிக்கையை அதிகரிக்க ஆர்ஜன்டீனாவும் கோல் நிலையை சமப்படுத்த போலந்தும் கடுமையாக முயற்சித்தன.

அதில் ஆர்ஜன்டீன வெற்றகண்டு போட்டியின் 67ஆவது நிமிடத்தில் 2ஆவது கோலைப் போட்டது.

என்ஸோ பெர்னாண்டஸ் பரிமாறிய பந்தை ஜூலியன் அல்வாரெஸ் கோலாக்கி ஆர்ஜன்டீனாவின் கோல் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கினார். அதன் பின்னர் இரண்டு அணிகளும் எவ்வளவு முயன்றும் மேலதிக கொல் போடப்படாத நிலையில் ஆர்ஜன்டீனா 2 – 0 என மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது.

இந்த போட்டி முடிவுடன் சி குழுவில் முதலாம் இடத்தைப் பெற்ற ஆர்ஜன்டீனா, அவுஸ்திரேலியாவையும் 2ஆம் இடத்தைப் பெற்ற போலந்து, பிரான்ஸையும் 2ஆம் சுற்றில் எதிர்த்தாடவுள்ளன.

சவூதி அரேபியாவுடனான போட்டியில் கடைசி நிமிடம் வரை மெக்சிகோ 2 – 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்ததால் மெக்சிகோவும் போலந்தும் சம புள்ளிகளையும் போடப்பட்ட மற்றும் விடப்படட கோல்களில் சம கோல்களையும் கொண்டிருந்தன. இரண்டு அணிகளும் சம நிலையில் இருந்தால் பீபாவீன் நேர்த்தியான விளையாட்டு (Fair Play) விதியின் பிரகாரம் குறைந்த மஞ்சள் அட்டைகளைக் கொண்டிருந்த போலந்து இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெறுவதாக இருந்தது.

எனினும் கடைசி செக்கன்களில் சவூதி அரேபியா கோல் ஒன்றைப் போட்டதால் நேர்த்தியான விளையாட்டு விதியைக் கருத்தில்கொள்வதற்கு அவசியம் ஏற்படவில்லை.

Previous Post

மெக்சிகோவின் 2ஆம் சுற்று வாய்ப்பு கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாமல் போனது

Next Post

தற்செயலாக தொலைக்காட்சியை பார்த்ததால் தப்பிச் சென்ற கோட்டாபய | விமலின் தகவல்

Next Post
தற்செயலாக தொலைக்காட்சியை பார்த்ததால் தப்பிச் சென்ற கோட்டாபய | விமலின் தகவல்

தற்செயலாக தொலைக்காட்சியை பார்த்ததால் தப்பிச் சென்ற கோட்டாபய | விமலின் தகவல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures