மினுவாங்கொடை நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு பஸ் ஒன்று திங்கட்கிழமை (நவ.28) தீப்பிடித்து எரிந்துள்ளது.
பஸ்ஸில் காணப்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது என மினுவாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தத் தீயினால் தனியார் கட்டிடம் மற்றும் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.
பஸ்ஸுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் இதுவரை தெரியவில்லை எனவும் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.