Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மின்சாரக் கட்டண அதிகரிப்பால் பாதிக்கப்பட்டுள்ள மதஸ்தானங்கள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் | ஹக்கீம்

November 25, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
மின்சாரக் கட்டண அதிகரிப்பால் பாதிக்கப்பட்டுள்ள மதஸ்தானங்கள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் | ஹக்கீம்

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையில் மின் கட்டண அதிகரிப்பினால் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள மதஸ்தானங்கள் தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (25) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு மற்றும் நீர்வழங்கல் அமைச்சு விடயதானங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

புதிய மின் கட்டண திருத்தம் காரணமாக மதஸ்தானங்கள் பாரிய சிக்கல்களுக்கு முகம்கொடுத்து வருகின்றன. அதிக வருமானங்கள் இருக்கும் பள்ளிவாசல், கோயில், விகாரை, ஆலயங்கள் இருக்கின்றன.

அவ்வாறான மதஸ்தானங்களுக்கு மின் கட்டண உயர்வை தாங்கிக்கொள்ள முடியுமாக இருக்கும். என்றாலும் பின்தங்கிய பிரதேசங்களில் இருக்கும் மதஸ்தானங்களுக்கு இது பாரிய பிரச்சினையாகி இருக்கின்றது. அதனால் இதுதொடர்பாக கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

அத்துடன் நீர் கட்டண மறுசீரமைப்பை மேற்கொள்ள கடந்த காலங்களில் நாங்கள் நடவடிக்கை எடுத்தபோது அரசியல் அழுத்தங்கள் காரணமாக அது சாத்தியமற்றுபோனது. என்றாலும் தற்போது 70வீத கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

இன்றாலும் கட்டணம் தொடர்பில் பொது அளவுகோள் ஒன்றை மேற்கொள்ளவேண்டும். ஏனெனில் நீர் மற்றும் மின்சார கட்டணங்களை அதிகரிக்கும்போது பாரிய எதிர்ப்புகளுக்கு முகம்காெடுக்க வேண்டி ஏற்படுகின்றது.

மேலும் கடந்த காலங்களில் 3வருடங்களுக்கு ஒரு முறை நீர் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்படும். ஆனால் 2009ஆண்டில் இருந்து 2019வரை அரசியல் அழுத்தங்கள் காரணங்களால் கட்டண அதிகரிப்பு மேற்கொள்ள முடியாமல்போனது.

இந்த தருணத்தில் நீர்வழங்கல் மற்றும் வலுசக்தி போன்றவற்றில் அரச. தனியார் பங்குடமையை அறிமுகப்படுத்தவேண்டும். இவ்வாறான புதிய முதலீடுகளை மேற்கொள்வதற்கு கடந்த காலங்களில் பாரிய எதிர்ப்புகள் காணப்பட்டண.

என்றாலும் தற்போது நாங்கள் இருக்கும் நிலையில் அரச, தனியார் பங்குடமையை மேற்கொண்டே ஆகவேண்டும். வேறு தெரிவு இல்லை என்றார்.

Previous Post

200 விசேட வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் | ராஜித சேனாரத்ன

Next Post

மின்கட்டணத்தை மீண்டும் திருத்தம் செய்ய அமைச்சரவை பத்திரம் | காஞ்சன

Next Post
மின்கட்டணத்தை மீண்டும் திருத்தம் செய்ய அமைச்சரவை பத்திரம் | காஞ்சன

மின்கட்டணத்தை மீண்டும் திருத்தம் செய்ய அமைச்சரவை பத்திரம் | காஞ்சன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

புலிகளின் ஆயுதங்களை கடத்தி நடுகடலில் விரோதிகளுக்கு கைமாற்றிய கோட்டாபய!

கோட்டாபயவிடம் வாக்குமூலம் பதிவு…! தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல் நீடிப்பு

July 2, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

இளையராஜா 134 படங்களின் பாடல்களுக்கும் உரிமை கோர முடியாது – உயர்நீதிமன்றம்

July 2, 2026
ஈக்வடோரை வீழ்த்தி 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது மெக்ஸிகோ

ஈக்வடோரை வீழ்த்தி 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது மெக்ஸிகோ

July 1, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

அவசர கால சட்டம் இனியும் நீடிக்கப்பட மாட்டாது – அரசாங்கம் அறிவிப்பு

July 1, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures