சர்வதேச நாணயநிதியத்தின் ஓய்வூதியத்துடன் 2.5 மில்லியன் சம்பளம் தனக்கு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுவதை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க நிராகரித்துள்ளார்.
செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் இவ்வாறு தெரிவிக்கப்படும் விடயங்கள் எந்த ஆதாரமும் அற்றவை என தெரிவித்துள்ளார்.
இவ்வாறான தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை நான் சர்வதேச நாணயநிதியத்தின் ஓய்வூதியத்தை பெறவில்லை எனது நாட்டின் சார்பில்நான் சிறிது காலம் சர்வதேச நாணயத்துடன் செயற்பட்டவேளை எனக்கு குறிப்பிடத்தக்க தொகை செலுத்தப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியில் எனது சம்பளம் 400000 மேலும் ஆளுநர் என்ற அடிப்படையில் காரும் வீடும் தந்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னைய ஆளுநரை போல எனக்கு பாதுகாப்பு எதுவும் வழங்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.