நடிகர் ஜீவா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘வரலாறு முக்கியம்’ படத்தின் வெளியீட்டுத் திகதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அறிமுக இயக்குநர் சந்தோஷ் ராஜன் இயக்கிய ‘வரலாறு முக்கியம்’ படத்தில் ஜீவா கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை காஷ்மிரா பர்தேசி மற்றும் பிரக்யா நாக்ரா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
இவர்களுடன் நடிகர் டி.எஸ்.கே முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்துக்கு ஷான் ரகுமான் இசையமைத்திருக்கிறார்.
நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாராகியுள்ள இந்த படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி. செளத்ரி தயாரித்திருக்கிறார்.
அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில் ‘வரலாறு முக்கியம்’ திரைப்படம் எதிர்வரும் டிசம்பர் 9ஆம் திகதி வெளியாகவுள்ளது என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருப்பதால், படத்துக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
