இலங்கை ஐக்கிய புகைப்பட சங்கம் முதல் தடவையாக ஏற்பாடு செய்துள்ள மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுத் தொடர் எதிர்வரும் 20ஆம் திகதி ஞாயிறன்று கொழும்பு – 5 நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள ஷாலிக்கா மைதானத்தில் நடைபெறவுள்ளது.
அணிக்கு 8 பேர் கொண்ட 64 அணிகள் பங்கேற்கின்ற இப்போட்டித் தொடரில் தலா 16 அணிகள் ஏ, பீ, சீ, டீ ஆகிய 4 குழுக்களில் இடம் பெறுகின்றன.
அணிக்கு 5 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட ‘நொக் அவுட்’ முறையில் நடைபெறும் இப்போட்டித் தொடரில் ஏ, பீ, சீ, டீ ஆகிய 4 குழுக்களிலும் ஒவ்வொரு குழுவிலிருந்தும் தோல்வியடையாமல் முன்னேறுகின்ற அணிகள் அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெறும்.
இவ்வாறு அரை இறுதி சுற்றில் வெற்றியீட்டும் இரண்டு அணிகள் சம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கான இறுதிப் போட்டியில் மோதிக்கொள்ளும்.
இப்போட்டித் தொடரில் குறித்த அறிமுக விழா கொழும்பு -12 பிறைட்டன் ஹோட்டலில் நேற்று (17) நடைபெற்றது.
இப்போட்டித் தொடருக்கான ஊடக அனுசரணை வீரகேசரி வழங்குவதுடன் பிரதான அனுசரணையை டய்யான் லங்கா நிறுவனம் வழங்குகிறது. இணை அனுசரணையை சதீஸ் ஜுவல்லரீ வழங்குவத்துடன், ஸ்டூடியோ ப்ளூ ரோஸும் அனுசரணை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.