காரொன்று மதிலுடன் மோதி விபத்திற்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் 2 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த விபத்து இன்று (18) காலை கல்கமுவ, இஹலகம பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த கார் மதிலுடன் மோதியே விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் உயிரிழந்த இராணுவ மேஜர் 35 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.