இலங்கையில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய்க்கு பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்த தகவலை சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்று அறிவித்துள்ளார்.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர் டுபாயில் இருந்து நாடு திரும்பிய இலங்கையர் ஒருவருக்கே இந்நோய் கண்டறியப்பட்டுள்ளது.
குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட இந்நோயாளி இலங்கையில் 2வது நோயாளி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாவது நோயாளி
மேலும், பல நாடுகளில் பரவலாகக் காணப்படும் குரங்கம்மை அறிகுறிகளுடன் கூடிய நோயாளி ஒருவர் முதன்முறையாக கடந்த வெள்ளிக்கிழமை இலங்கையில் கண்டறியப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.