முட்டை விலை தொடர்பில் முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.
முட்டை விலையை அதிகரிக்க உணவு பாதுகாப்பு குழு அனுமதி அளித்துள்ளதாக முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பொருளாளர் விஜய அல்விஸ் தெரிவித்துள்ளார்.
மேன்முறையீட்டு நீதிமன்றில் நேற்று தாக்கல் செய்திருந்த வழக்கு விசாரணையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மனு தாக்கல்

வெள்ளை முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 43 ரூபாவாகவும் சிவப்பு முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 45 ரூபாவாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகாரசபை வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
எனினும், குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக முட்டை உற்பத்தியாளர் சங்கம் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளது.