மேன்முறையீட்டு நீதிமன்றத்தில், இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமர் மற்றும் உதைபந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளர் உபாலி ஹெவகே ஆகியோர் தாக்கல் செய்த வழக்கு இன்று (ஒக்டோபர் 20, 2022) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
69 நாட்களுக்குள் கால்பந்து சம்மேளனத்தின் தேர்தலை நடத்தவுள்ளதாக விளையாட்டுத்துறை பணிப்பாளர் நாயகம் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த வழக்கை 2022 ஒக்டோபர் 26 புதன்கிழமை மீண்டும் அழைக்க நீதிமன்றம் தீர்மானித்தது .
கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தேர்தலை நடத்தும் திகதியை அன்றைய தினம் அறிவிக்குமாறு விளையாட்டுத்துறை பணிப்பாளர் நாயகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
தேர்தலை விரைவாக நடத்துமாறு கோரி 40 கால்பந்து லீக்குகள் இந்த வழக்கில் இடையீட்டு மனுதாரர்களாக இணைந்துள்ளதாகவும் ஜஸ்வர் உமர் கூறினார்.
துரிதமாக தேர்தலை நடத்துவதன் மூலம் விரைவாக இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.