இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத்தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ஆகியோரை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
12 ஆம் திகதி புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட எரிக் சொல்ஹெய்ம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சுற்றாடல் அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்நிலையிலேயே எரிக்சொல்ஹெய்ம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் மற்றும் சாணக்கியன் ஆகியோரை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது இலங்கையின் பொருளாதார மீட்சி, பசுமையான அபிவிருத்திகள் மற்றும் அரசியல் சீர்திருத்தம் குறித்து கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக்சொல்ஹெய்மை தனது சர்வதேச காலநிலை ஆலோசகராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.