கொரோனா வைரஸ் அதிகரிப்பு தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வின்மை ஆகியன இலங்கையில் ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் நிலையில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றது என தெரிவித்துள்ள கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலையின் வைத்தியர் தீபல் பெரேரா ஐந்து வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் அதிகளவில் மந்தபோசாக்கினால் பாதிக்கப்படுகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மந்தபோசாக்கும் அதன் அளவும் இலங்கையில் அதிகரித்துள்ளது மெலிந்த தோற்றமுள்ள சிறுவர்கள் இதற்கு சாட்சியாக உள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலை நீண்டநாள் பாதிப்புகளை ஏற்படுத்தும் போசாக்கின்மையால் பாதிக்கப்படும் சிறுவர்களால் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடமுடியாது என வைத்தியர் தீபல் பெரேரா தெரிவித்துள்ளார்.
உணவுப்பழக்கவழங்களில் ஏற்படும் மாற்றங்கள் போசாக்கின்மையை ஏற்படுத்துகின்றன – துரித உணவுகள் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.