ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு தான் கையொப்பமிடப் போவதில்லை என சட்டமா அதிபர் ஊடாக இன்று உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
மரண தண்டனை விதிக்கப்பட்ட நான்கு குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு 2019ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை இரத்து செய்யுமாறு கோரி பல அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்நிலையில், சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே, தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முடிவை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.