Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பாடசாலை மாணவர்களின் போசாக்கை உறுதிப்படுத்த பல்வேறு வேலைத்திட்டங்கள் | சுசில் பிரேமஜயந்த

August 29, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
பாடசாலை மாணவர்களின் போசாக்கை உறுதிப்படுத்த பல்வேறு வேலைத்திட்டங்கள் | சுசில் பிரேமஜயந்த

ஐரோப்பிய ஒன்றியம், யுனிசெஃப் அமைப்பு மற்றும் நியூசிலாந்து, அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் இணைந்து பாடசாலை மாணவர்களின் போஷாக்கினை உறுதிப்படுத்தும் வகையில் உணவு வழங்கும் வேலைத்திட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

பாடசாலை மாணவர்களின் போஷாக்கினை உறுதிப்படுத்துவதற்காக பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

அரசாங்கத்தினால் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. பாடசாலை மாணவர்களுக்கு வழங்குவதற்காக 3000 தொன் துவரம் பருப்பு அமெரிக்காவிடமிருந்து கிடைக்கப் பெற்றுள்ளது.

1700 தொன் டின் மீன் கிடைக்கப்பெறவுள்ளது. அதன் முதற்கட்டம் கிடைக்கப் பெற்றுள்ளது. ‘சிறுவர்களை பாதுகாப்போம்’ அமைப்புடன் கல்வி அமைச்சின் போஷாக்கு வேலைத்திட்ட பிரிவு ஒன்றிணைந்து பாடசாலைகளில் உணவு வழங்கும் வேலைத்திட்டத்தினை நாடளாவிய ரீதியில் முன்னெடுத்துள்ளோம்.

ஆரம்பப் பிரிவில் 16 இலட்சத்து 40 000 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். அவர்களுக்கான உணவு வழங்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்காக பல்வேறு தனியார் நிறுவனங்கள் முன்வந்துள்ளன.

இதற்கு முன்னர் பாடசாலைகளில் மதிய உணவு வழங்கப்படாத பாடசாலைகளிலும் அதற்காக வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைத்திட்டங்களுக்கான ஒத்துழைப்புக்களைப் பெற்றுக் கொள்வதற்காக நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் , அமெரிக்கா மற்றும் ரஷ்ய தூதுவர்களுடனும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இவற்றுக்கு மேலதிகமாக ஐரோப்பிய ஒன்றியம் , யுனிசெஃப் அமைப்பு ஆகியவற்றுடன் கலந்துரையாடி அவர்களுக்கு தேவையான சகல தகவல்களும் வழங்கப்பட்டுள்ளன.

அதற்கமைய பாடசாலைகளில் அதிகளவான மாணவர்களும் , ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கும் உணவு வழங்கும் வேலைத்திட்டத்தினை பரந்தளவில் முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

Previous Post

போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்ட 40 ஆயிரம் பேர் வைத்தியசாலைகளில் – ராஜித

Next Post

உயர்தர பரீட்சை பெறுபேறுகளில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தினை பெற்ற மாணவர்கள்

Next Post
உயர்தர பரீட்சை பெறுபேறுகளில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தினை பெற்ற மாணவர்கள்

உயர்தர பரீட்சை பெறுபேறுகளில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தினை பெற்ற மாணவர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ஈக்வடோரை வீழ்த்தி 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது மெக்ஸிகோ

ஈக்வடோரை வீழ்த்தி 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது மெக்ஸிகோ

July 1, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

அவசர கால சட்டம் இனியும் நீடிக்கப்பட மாட்டாது – அரசாங்கம் அறிவிப்பு

July 1, 2026
வவுனியா மாநகர முன்னாள் மேயர் உட்பட 4 பேரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

வவுனியா மாநகர முன்னாள் மேயர் உட்பட 4 பேரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

July 1, 2026
தனியார் பஸ் சேவைகள் 50 சதவீதத்தால் குறைவடையும்

பஸ் கட்டணங்களை 12% இனால் அதிகரிக்க தீர்மானம்

July 1, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures