Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

திரு­ம­ண­மான, குழந்தை பெற்ற பெண்­க­ளும் மிஸ் யூனிவர்ஸ் அழ­கு­ராணி போட்­டியில் பங்குபற்ற அனு­மதி

August 22, 2022
in News, World, முக்கிய செய்திகள்
0
திரு­ம­ண­மான, குழந்தை பெற்ற பெண்­க­ளும் மிஸ் யூனிவர்ஸ் அழ­கு­ராணி போட்­டியில் பங்குபற்ற அனு­மதி

மிஸ் யூனிவர்ஸ் (பிர­பஞ்ச அழ­கு­ராணி) போட்­டி­களில் பங்­கு­பற்­று­வ­தற்கு திரு­ம­ண­மான மற்றும் குழந்தை பெற்ற பெண்­க­ளையும் அடுத்த வருடம் முதல் அனு­ம­திப்­ப­தற்கு அப்­போட்டி ஏற்­பாட்­ட­ளர்கள் தீர்­மா­னித்­துள்­ளனர். வர­லாற்று முக்­கி­யத்­துவம் வாய்ந்த ஒரு தீர்­மா­ன­மாக இது கரு­தப்­ப­டு­கி­றது.

உலக அழ­கு­ராணி (மிஸ் வேர்ல்ட்) போட்­டி­க­ளுடன் உலகின் மிகவும் பிர­சித்தி பெற்ற அழ­கு­ராணி போட்­டி­யாக மிஸ் யூனிவர்ஸ் போட்டி விளங்­கு­கி­றது. 70 ஆவது மிஸ் யூனிவர்ஸ் அழ­கு­ராணி போட்டி கடந்த வருடம் இஸ்­ரேலில் நடை­பெற்­றது. இப்­போட்­டியில் இந்­தி­யாவின் ஹர்னாஸ் சந்து முத­லிடம் பெற்­றி­ருந்தார்.

1952 ஆம் ஆண்டு இப்­போட்­டிகள் ஆரம்­பிக்­கப்­பட்­டன. இது­வரை திரு­ம­ண­மா­காத பெண்கள் மாத்­தி­ரமே மிஸ் யூனிவர்ஸ் அழ­கு­ராணி போட்­டியில் பங்­கு­பற்­று­வ­தற்கு அனு­ம­திக்­கப்­பட்­டனர்.

இப்­போட்­டி­யா­ளர்கள், திரு­ம­ண­மா­கா­த­வர்­க­ளா­கவும் குழந்தை பெறா­த­வர்­க­ளா­கவும் 18 முதல் 28 வய­துக்கு இடைப்­பட்­டோ­ரா­கவும் இருக்க வேண்டும் என்­பது இப்­போட்­டி­யா­ளர்­க­ளான முக்­கிய நிபந்­த­னை­யாக உள்­ளது.

அத்­துடன் மிஸ் யூனிவர்ஸ் அழ­கு­ரா­ணி­யாக தெரிவு செய்­யப்­ப­டு­வர்கள் ஒரு வருட காலத்­துக்குள் திரு­மணம் செய்­யவோ குழந்தை பெறவோ கூடாது என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. இவ்­வ­ருட இறு­தியில் நடை­பெ­ற­வுள்ள 71 ஆவது மிஸ் யூனிவர்ஸ் போட்­டி­யிலும் இவ்­வி­திகள் பின்­பற்­றப்­ப­ட­வுள்­ளன.

ஆனால், 2023 ஆம் ஆண்டு நடை­பெ­ற­வுள்ள 72 ஆவது மிஸ் யூனிவர்ஸ் போட்­டி­க­ளி­லி­ருந்து திரு­ம­ண­மான பெண்கள், குழந்தை பெற்ற பெண்­க­ளையும் போட்­டி­யா­ளர்­க­ளாக இணைத்­துக்­கொள்ள மிஸ் யூனிவர்ஸ் போட்டி ஏற்­பாட்­டா­ளர்கள் தீர்­மா­னித்­துள்­ளனர்.

இப்­போட்டி ஏற்­பாட்­டா­ளர்­களின் உள்­ளக அறிக்கை ஒன்றில், ‘பெண்கள் தமது வாழ்க்கை தொடர்­பான செய­லாண்­மையைக் கொண்­டி­ருக்க வேண்டும். மனி­தர்­களின் வெற்­றி­க­ளுக்கு அவர்­களின் தனிப்­பட்ட தீர்­மா­னங்கள் தடை­யாக இருக்­கக்­கூ­டாது எனக் கரு­து­கிறோம்’ எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

2020 ஆம் ஆண்டு மிஸ் யூனிவர்ஸ் அழ­கு­ரா­ணி­யாக தெரி­வு­செய்­யப்­பட்ட, மெக்­ஸி­கோவைச் சேர்ந்த அண்ட்­றியா மேஸா இது தொடர்­பாக கூறு­கையில், ‘இவ்­வி­டயம் யதார்த்­த­மா­வதை நான் மிகவும் விரும்­பு­கிறேன்.

சமூகம் மாற்­ற­ம­டைந்து வரும் நிலை யில், முன்னர் ஆண்கள் மாத்­தி­ரமே வகிக்­கக்­கூ­டிய தலை­மைத்­துவப் பத­வி­களை தற்­போது பெண்­களும் வகிக்­கி­றார்கள். அழ­கு­ராணி போட்­டிகள் மாற்­ற­ம­டைந்து, குடும்­பங்­களைக் கொண்ட பெண்­க­ளுக்கும் இப்­போட்­டிகள் திறக்­கப்­பட வேண்­டிய தருணம் இது’ எனக் கூறியுள்ளார்.

Previous Post

தலிபான் ஆட்சிக்கு வந்த பின்னர் ஆப்கான் தனது பத்திரிகையாளர்களில் 60 வீதமானவர்களை இழந்துள்ளது.

Next Post

புதையல் தோண்டுவதற்கு முயற்சித்த 8 பேர் கைது

Next Post
சட்ட விரோத கிருமி நாசினிகளுடன் ஒருவர் கைது

புதையல் தோண்டுவதற்கு முயற்சித்த 8 பேர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures