முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ மீண்டும் அரசியலில் ஈடுபடுவார் என்பதை ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. அமெரிக்க குடியுரிமையினை இரத்து செய்து விட்டு நாட்டுக்கு சேவையாற்றுவதற்காகவே அவர் அரசியலில் ஈடுப்பட்டார்.
பல்வேறு காரணிகளினால் அரச நிர்வாகத்தை முன்னெடுக்க முடியாமல் போய்விட்டது என ஆளும் தரப்பின் பிரதம கொறடா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
கண்டி நகரில் 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டதை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஆவர் அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
நாட்டு மக்களுக்கு உள்ள சுதந்திரம் மற்றும் உரிமை அவருக்கும் உண்டு. அந்த உரிமை முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவிறகும் கிடைக்கப்பெற வேண்டும்.போராட்டகாரர்களினால் அவர் தொடர்ந்து வெளிநாட்டில் வசிப்பது அவருக்கு எதிரான மனித உரிமை மீறலாக கருதப்படும்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி,நாட்டுக்கு வருகை தருவதற்கான சூழலை ஏற்படுத்தி அவருக்கு பாதுகாப்பு வழங்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளோம்.
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணவும்,மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் பொதுஜன பெரமுன ஜனாதிபதிக்கு நிபந்தனையற்ற ஒத்துழைப்பை வழங்கும்.
பாராளுமன்றில் 145பேர் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பிற்கமைய அரச நிர்வாகத்தை முன்னெடுக்க பொதுஜன பெரமுன பாராளுமன்ற மட்டத்தில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கும்.
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு ஒத்துழைப்பு வழங்குவது சகல அரசியல் கட்சிகளினதும் தலையாய கடமையாகும்.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கையினை ஏற்றுக்கொண்டவர்களில் பெரும்பாலானோர் எதிர்க்கட்சியில் உள்ளார்கள்.
மக்கள் விடுதலை முன்னணிமுஸ்லிம் காங்கிரஸ் உட்பட தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் ஜனாதிபதியின் கொள்கை திட்டங்களுக்கு ஆதரவு வழங்குவார்கள் என்பதை எதிர்பார்க்கிறேன்.
பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து சர்வக்கட்சி அரசாங்கம் அல்லது சர்வ்க்கட்சி நிர்வாகம் ஸ்தாபிக்கப்படுமாயின் அதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குமாறு பிரதான அரசியல் கட்சிகளிடம் வலியுறுத்தியுள்ளோம் என்றார்.