2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடக்கம் 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையான காலப்பகுதியில் ஜப்பானில் 8,000 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
கொவிட் தொற்று காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளே, தற்கொலைகள் அதிகரிப்புக்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது.
தற்கொலை செய்து கொண்டவர்களில் 20 வயதுடைய பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதேவேளை இளம் பெண்களின் எண்ணிக்கையும் கணிசமானளவு அதிகரித்துள்ளது.
தொற்று நோய் காரணமாக 20 வயதிற்குட்பட்ட 1,837 பேர் தற்கொலைகள் செய்து கொண்டுள்ளதோடு, அவர்களில் 1,092 பேர் பெண்கள் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
377 தொற்றுநோய் தொடர்பான தற்கொலைகளில் 282 பேர் 19 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண்களாவர்.
இதற்கு காரணம் ஆண்களை விட வேலைகள் இல்லாத பெண்கள் பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்படுகின்றனர். அதே நேரத்தில் இளைஞர்கள் நடத்தைகள் கட்டுப்பாடுகளால் தனிமைப்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என டோக்கியோ டைசுகே நகாடா பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.
தற்கொலைகளின் தரவுகளை கணக்கில் எடுத்துக்கொண்டு அரசாங்கம் தனது கொள்கையை மாற்ற வேண்டும் என ஒசாகா பல்கலைக்கழகத்தில் விசேட நிபுணர் பேராசிரியர் ஃபுமியோ ஓட்டேக் வலியுறுத்தியுள்ளார்.
கொவிட் வைரஸ் தொற்றுநோய் பரவலை தடுப்பதற்கு சமூக மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை நிறுத்த எடுக்கப்படும் நடவடிக்கையால் ஏற்படும் அபாயங்களை எடைபோடுவது முக்கியம். மேலும், பாதிக்கப்பட்ட நோயாளிகள் சமூகப் பொருளாதார நடவடிக்கைகளைப் பராமரிக்க தனிமைப்படுத்தல் காலத்தைக் குறைப்பது போன்ற நடவடிக்கைகளைத் தளர்த்துவது அவசியம் என கொவிட் நடவடிக்கைகள் குறித்த அரசாங்கத்தின் குழுவில் உறுப்பினராக இருக்கும் ஓட்டேக் தெரிவித்துள்ளார்.
ஜப்பானில் தற்கொலைகள் 2010 முதல் ஆண்டுதோறும் குறைந்து வந்துள்ளது. இந்நிலை 2020 இல் தலைகீழாக மாறி 2021 அதிகரித்துள்ளது.