Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பணத்திற்காக பாக்கிஸ்தான் அய்மன் அல் ஜவஹிரி குறித்த தகவலை அமெரிக்காவிற்கு வழங்கியிருக்கலாம்

August 16, 2022
in News, World, முக்கிய செய்திகள்
0
பணத்திற்காக பாக்கிஸ்தான் அய்மன் அல் ஜவஹிரி குறித்த தகவலை அமெரிக்காவிற்கு வழங்கியிருக்கலாம்

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படையினர் விலகுவதற்கு முன்னர் உடன்படிக்கை கைச்சாத்தான போதிலும் காபுலில் அல்ஹைதா தலைவர் அய்மன் அல் ஜவஹிரி கொல்லப்பட்டுள்ளமை இந்த கொலையில் பாக்கிஸ்தானிற்கு தொடர்புள்ளதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

அல்ஹைதா தலைவர் கொல்லப்படுவதற்கு முன்னர் பாக்கிஸ்தானின் இராணுவதளபதி ஜெனரல் கமார் ஜாவிட் பஜ்வா சர்வதேச நாணயநிதியத்திடமிருந்து கடன்பெறுவதற்கு அமெரிக்காவின் உதவியை நாடியிருந்தார்.

மேலும் அமெரிக்காவின் பிரதி இராஜாங்க செயலாளர் வென்டி செர்மனுடன் இராணுவதளபதி தொலைபேசி உரையாடலை மேற்கொண்டார் இது வழமைக்கு மாறான விடயம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாக்கிஸ்தானை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்பதற்கான முயற்சிகளில் அவர் ஈடுபட்டிருந்தவேளையே அவர் உதவிக்கான வேண்டுகோளை விடுத்தார்.

அந்நிய செலாவணி கையிருப்புகள் முடிவடையத்தொடங்கியதால் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக அவர் அமெரிக்காவை நாடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.

அமெரிக்கா அழுத்தங்களை பிரயோகிக்கும் தந்திரோபாயத்தை கோரியிருக்கலாம் உதவிக்கு பதில் அல்ஹைதா தலைவர் குறித்த தகவலை கோரியிருக்கலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்கா அல்ஹைதா தலைவரின் மறைவிடத்தை கோரியிருக்கலாம் என இஸ்ரேலில் வெளியான ஊடக தகவலொன்று தெரிவித்துள்ளது.

பாக்கிஸ்தானை பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்தாமல் தகவலை தருமாறு கோருவது போதும் என அமெரிக்காக கருதியதா என நிபுணர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இம்முறை அல்ஹைதா தலைவர் குறித்து தகவலை வழங்கியுள்ள பாக்கிஸ்தான் இராணுவம் எதிர்காலத்திலும் தகவல்களை வழங்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அய்மன் அல்ஜவஹிரியின் வீட்டின் மீது முதல் இரு ரொக்கட்களையும் ஏவிய ஆளில்லா விமானம் எங்கிருந்து சென்றது என்பது தெளிவாகவில்லை என ஏஐஈ நிறுவகத்தின் சிரேஸ் நிபுணர் மிச்சேல் ரூபின் டைம்ஸ் ஒவ் இஸ்ரேலில் எழுதியுள்ளார்.

அமெரிக்க ஆளில்லா விமானம் பாக்கிஸ்தானிலிருந்து சென்றிருந்தால் இந்த விடயத்தில் பாக்கிஸ்தான் இராணுவதளபதிக்கு தொடர்புள்ளது என்பது உறுதியாகும்.

அதேவேளை இதன் மூலம் அமெரிக்க ஜனாதிபதி ஆப்கானிஸ்தானில் இடம்பெறும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் விடயத்தில் பாக்கிஸ்தானிற்கு வீட்டோ அதிகாரத்தை வழங்குகின்றார் எனவும் கருதலாம்.

தனது பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை பயன்படுத்தி பாக்கிஸ்தான் பணத்தை பெறுவதற்கு அனுமதிப்பது குறித்து பைடன் நிர்வாகம் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என மிச்சேல் தெரிவிக்கின்றார்.பாக்கிஸ்தான் அனைத்து அல்ஹைதா சொத்துக்களையும் கையளிக்கவேண்டும் என அமெரிக்கா எச்சரிக்க வேண்டிய தருணம் இதுவென அவர் தெரிவிக்கின்றார்.

பாக்கிஸ்தான் எவ்ஏடிஎவ் பயங்கரவாத எதிர்ப்பு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவேண்டும் அல்லது பயங்கரவாதத்திற்கு உதவி வழங்கும் நாடு என பட்டியலிடப்பட்டு வங்குரோத்து நிலைக்கு தள்ளப்படும் ஆபத்தை எதிர்கொள்ளவேண்டும் என்ற எச்சரிக்கையை அமெரிக்கா விடுக்கவேண்டும் என அவர் தெரிவிக்கின்றார்.

பாரிசில் ஒக்டோபர் மாதம் எவ்டிஎவ்ஏயில் பாக்கிஸ்தான் குறித்து ஆராயப்படவுள்ளது.

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை கருத்தில்கொள்ளும்போது அந்த நாடு 2015 தேசிய செயற்பாட்டு திட்டத்தில் மட்டுப்படுத்தப்பட்ட முன்னேற்றத்தையே கண்டுள்ளது.

இந்த பட்டியலில் பாக்கிஸ்தான் இடம்பெற்றுள்ளமை அதன் இறக்குமதி ஏற்றுமதி வெளிநாட்டில் உள்ள அந்த நாட்டவர்களின் அனுப்பும் வருமானம் மட்டுப்படுத்தப்பட்ட வெளிநாட்டு கொடுப்பனவுகள் என்பவற்றின் மீது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது

Previous Post

உலக ஜனநாயகத்தின் தாய்வீடு இந்தியா | பிரதமர் மோடி

Next Post

யாழில் அதிக விலைக்கு தண்ணீர் போத்தல் விற்ற உணவகத்திற்கு எதிராக நடவடிக்கை

Next Post
யாழில் அதிக விலைக்கு தண்ணீர் போத்தல் விற்ற உணவகத்திற்கு எதிராக நடவடிக்கை

யாழில் அதிக விலைக்கு தண்ணீர் போத்தல் விற்ற உணவகத்திற்கு எதிராக நடவடிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures