அரசாங்கம் பொதுஜனபெரமுனவின் ஆதிக்கம் இல்லாத தேசிய கட்சிகளின் அரசாங்கத்தை அமைப்பதற்கான நேர்மையான முயற்சிகளில் ஈடுபட்டால் அவ்வாறான முயற்சிகளிற்கு ஆதரவளிப்பது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு பரிசிலீக்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பின சுமந்திரன் தெரிவித்துள்ளார்
சண்டே டைம்ஸ் இதனை தெரிவித்துள்ளது.
தமிழ்தேசிய கூட்டமைப்பும் அனைத்து கட்சி அரசாங்கத்தில் இணைவதற்கான விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளது அரசாங்கம் பொதுஜனபெரமுனவின் ஆதிக்கம் இல்லாத தேசிய கட்சிகளின் அரசாங்கத்தை அமைப்பதற்கான நேர்மையான முயற்சிகளில் ஈடுபட்டால் அவ்வாறான முயற்சிகளிற்கு ஆதரவளிப்பது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு பரிசிலீக்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார் என சண்டே டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.
அரசியல் ஆணையை இழந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான இன்னொரு அரசாங்கமாக தற்போதைய அரசாங்கம் மாறுவதற்கான காரணத்திற்காகவே நாங்கள் அதனை எதிர்க்கின்றோம் என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மக்கள் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவை நிராகரித்துள்ளனர்,இதன் காரணமாகவே அந்த கட்சி மூலம் தெரிவான ஜனாதிபதியும் பிரதமரும் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்யநிலையேற்பட்டது என சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுள்ள ஏனைய எதிர்கட்சிகளை உள்வாங்கிய அனைத்து கட்சி அரசாங்கம் உருவாகவேண்டும்,என மேலும் தெரிவித்துள்ள அவர் தேசிய அரசாங்கத்தை அமைக்கும் எந்த முயற்சியும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன தலைமையில் இடம்பெறக்கூடாது அந்த கட்சி ஆதிக்கம் செலுத்தக்கூடாது என்ற நிலைப்பாட்டை நாங்கள் பின்பற்றி வருகின்றோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.