Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

அதர்வாவின் ‘குருதி ஆட்டம்’ பட முன்னோட்டம் வெளியீடு

July 29, 2022
in Cinema, News, முக்கிய செய்திகள்
0
அதர்வாவின் ‘குருதி ஆட்டம்’ பட முன்னோட்டம் வெளியீடு

அதர்வா நடிப்பில் தயாராகி இருக்கும் ‘குருதி ஆட்டம்’ எனும் படத்தின் முன்னோட்டம் வெளியாகி இருக்கிறது. இந்தத் திரைப்படம் ஓகஸ்ட் மாதம் ஐந்தாம் திகதியன்று பட மாளிகையில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

‘எட்டு தோட்டாக்கள்’ எனும் படத்தை இயக்கிய இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘குருதி ஆட்டம்’. இதில் நடிகர் அதர்வா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார். இவர்களுடன் ராதா ரவி, ராதிகா சரத்குமார், வத்ஸன் சக்கரவர்த்தி, வினோத் சாகர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ராக்போர்ட் என்டர்டெய்ன்மென்ட் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் டி முருகானந்தம் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.

கொரோனா காரணமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டு இருந்த இப்படத்தின் பணிகள் அண்மையில் நிறைவடைந்ததால், இப்படத்தின் வெளியீடு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் ஓகஸ்ட் மாதம் ஐந்தாம் திகதியன்று இந்த திரைப்படம் பட மாளிகைகளில் வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இயக்குநர் மிஷ்கின் மற்றும் தயாரிப்பாளர் தனஜெயன் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர்.

இதன் போது இயக்குநர் பேசுகையில், ” எட்டு தோட்டாக்கள் படம் வெளியான பிறகு ஒரு வாரத்தில் அதர்வாவை சந்தித்து கதை கூறினேன். பிறகு திரைக்கதைக்காக ஓராண்டு காலம் செலவழித்தேன். இரண்டாம் பாதியில் அவர் குறிப்பிட்ட ஒரு குறையை நிவர்த்தி செய்ய முயன்று, அதன் பிறகு புதிய கோணத்தில் திரைக்கதையாக உருவானது. இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அதனைத் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்ற தருணத்தில் கொரோனா காரணமாக பணிகள் அனைத்தும் இடைநிறுத்தம் செய்யப்பட்டது.

இந்த திரைப்படத்தில் நடிகர் அதர்வா ஒரு கபடி வீரராக தோன்றுவதுடன் உணர்வுபூர்வமான முழு நீள எக்சன் திரைக்கதையில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் ஆசிரியை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.. நடுத்தர வர்க்கத்து மக்கள் சந்திக்கும் பிரச்சனையே பேசும் இந்த திரைப்படம் பெரிய அதிர்வை ஏற்படுத்தும் என உறுதியாக நம்புகிறேன்.” என்றார்.

‘குருதி ஆட்டம்’ முன்னோட்டத்தில் படத்தின் தலைப்பிற்கேற்ற வகையில் திரில்லரும், சண்டைக்காட்சிகளும் நிறைந்து காணப்படுவதால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.

நடிகர் அதர்வா நடிப்பில் வெளியான ‘பூமராங்’, ‘100’, ‘தள்ளி போகாதே’ ஆகிய படங்கள் வரிசையாக தோல்வியை தழுவியதால், வசூல் ரீதியிலான வெற்றியை அளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் நடிகர் அதர்வாவிற்கு ‘குருதி ஆட்டம்’, அவரது எண்ணத்தை பூர்த்தி செய்யும் என திரையுலக வணிகர்கள் உறுதியாக அவதானிக்கிறார்கள்.

Previous Post

தனுஷின் ‘வாத்தி’ ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியீடு

Next Post

இலங்கைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய உலக வங்கியின் எச்சரிக்கை

Next Post
உலக வங்கி இலங்கைக்கு உதவுவதற்குத் திட்டமிட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியான தகவல் குறித்து விளக்கம்

இலங்கைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய உலக வங்கியின் எச்சரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தபாய ராஜபக்ஸ.

விளையாட்டு வினையான சம்பவம்: 4 வயது தம்பியை தவறுதலாக சுட்டுக்கொன்ற சகோதரன்.

November 27, 2026
நடிகர் விமல் நடிக்கும் ‘நவோரியா’ படத்தின் ப்ரோமோ சாங் வெளியீடு

நடிகர் விமல் நடிக்கும் ‘நவோரியா’ படத்தின் ப்ரோமோ சாங் வெளியீடு

November 27, 2026
ஆசியாவில் முதல் முறையாக இலங்கை ரூபாவில் நிதி வசதி – உலக வங்கி குழுமம் புதிய திட்டம்

ஆசியாவில் முதல் முறையாக இலங்கை ரூபாவில் நிதி வசதி – உலக வங்கி குழுமம் புதிய திட்டம்

November 27, 2026
ஜேம்ஸ் கேமரூனின் அடுத்த மாயாஜாலம்! ‘அவதார் 4’ மற்றும் ‘அவதார் 5’ வெளியீட்டுத் திகதிகள் உத்தியோகபூர்வ அறிவிப்பு

ஜேம்ஸ் கேமரூனின் அடுத்த மாயாஜாலம்! ‘அவதார் 4’ மற்றும் ‘அவதார் 5’ வெளியீட்டுத் திகதிகள் உத்தியோகபூர்வ அறிவிப்பு

November 26, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures