Friday, August 29, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

எமது விளையாட்டு வீர வீராங்கனைகள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர் | இலங்கை தடகள சங்கத்தின் தலைவர்

July 29, 2022
in News, Sports, முக்கிய செய்திகள்
0
எமது விளையாட்டு வீர வீராங்கனைகள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர் | இலங்கை தடகள சங்கத்தின் தலைவர்

எமது இளம் இலங்கை விளையாட்டு வீர வீராங்கனைகளிடம் நாம் அடையாளம் காணும் திறமை உண்மையிலேயே ஊக்கமளிக்கிறது. ஆனால் அது அவர்களுக்கு எளிதான பயணம் அல்ல. எங்கள் விளையாட்டு வீர வீராங்கனைகள் தங்கள் பயிற்சிக்கு அப்பால் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர், மேலும் தங்களது இருப்பைத் தக்க வைத்துக்கொள்ள நிறைய கடின உழைப்புகளைச் செய்கிறார்கள்” என இலங்கை தடகள சங்கத்தின் ( SLAA) தலைவர் மேஜர் ஜெனரல் பாலித்த பெர்னாண்டோ தெரிவித்தார்.

2024 ஒலிம்பிக்கிற்கான இலங்கை தடகள அணியின் பயணத்திற்கான உத்தியோகபூர்வ ஆடை அனுசரணையாளர்களாக MAS நியமிக்கப்பட்டுள்ளது.

MAS ஹோல்டிங்ஸின் துணை நிறுவனமான Bodyline (Pvt) Ltd, 2022ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் வரை இலங்கை தடகள சங்கத்தின் – SLAA இன் உத்தியோகபூர்வ ஆடை அனுசரணையாளராக செயற்படவுள்ளது.

2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் 28ஆம் திகதி நடைபெற்ற நிகழ்வில், Bodylineஇன் பிரதம நிறைவேற்று அதிகாரி தினேஷ் டி சில்வா, SLAAஇன் தலைவர் மேஜர் ஜெனரல் பாலித்த பெர்னாண்டோவிடம் MASஆல் வடிவமைக்கப்பட்ட தடகள ஆடைப் பொதிகளை உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

MAS தெற்காசியாவின் மிகப்பெரிய ஆடை உற்பத்தியாளர், சர்வதேச விளையாட்டு ஆடை பிராண்டுகளுக்கான உயர்தர தயாரிப்புகளை வடிவமைத்து மேம்படுத்துகிறது.

இந்த கூட்டாண்மையின் மூலம், 2024இல் பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு வழிவகுக்கும் சர்வதேச நிகழ்வுகளில் அவர்களின் பயிற்சி மற்றும் செயல்திறனை ஆதரிக்கும் வகையில், நவீன ஆடை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்ட ஆடைப் பொதிகளை இலங்கை விளையாட்டு வீரர்களுக்கு MAS வழங்கியது.

இந்த ஆண்டு ஜூன் மாதம் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட 20 விளையாட்டு வீர வீராங்கனைகளுக்கு ஆடைப் பொதிகள் வழங்கப்பட்டன. இதன்படி MASஆல் வடிவமைக்கப்பட்ட போட்டி நாளுக்கான மற்றும் பயிற்சிகளின் போது அணிவதற்கான ஆடைப் பொதிகளைப் பெற்ற முதலாவது குழு இதுவாகும்.

“எமது இளம் இலங்கை விளையாட்டு வீர வீராங்கனைகளிடம் நாம் அடையாளம் காணும் திறமை உண்மையிலேயே ஊக்கமளிக்கிறது. ஆனால் அது அவர்களுக்கு எளிதான பயணம் அல்ல.

எங்கள் விளையாட்டு வீர வீராங்கனைகள் தங்கள் பயிற்சிக்கு அப்பால் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர், மேலும் தங்களது இருப்பைத் தக்க வைத்துக்கொள்ள நிறைய கடின உழைப்புகளைச் செய்கிறார்கள்” என SLAAஇன் தலைவர் மேஜர் ஜெனரல் பாலித்த பெர்னாண்டோ தெரிவித்தார்.

“இந்த நாட்டின் கிராமப்புறங்களில் இருந்து பின்தங்கிய மற்றும் திறமையான விளையாட்டு வீர வீராங்கனைகள் சர்வதேச அரங்கின் வாசலை எதிர்நோக்கும் போது, இந்த ஆதரவு அவர்களுக்கு பெரும் பலமாக இருக்கும். இலங்கையில் உள்ள ஒவ்வொரு தடகள விளையாட்டு வீர வீராங்கனைகள் சார்பாகவும், MAS Holdings எடுத்துள்ள இந்த மாபெரும் நடவடிக்கையை நான் பாராட்டுகிறேன். எமது தாய்நாட்டை பெருமைப்படுத்த சர்வதேச மட்டத்திற்கு செல்லும் இலங்கை விளையாட்டு வீர வீராங்கனைகளுக்கு இது உறுதுணையாக இருக்கும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

“MASஇல் உள்ள நாங்கள் மாற்றங்களை உருவாக்குபவர்கள்” என தெரிவித்திருந்த Bodyline நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் வணிக மேம்பாட்டு பணிப்பாளர் டில்ஷான் மொஹமட் கூறுகையில், “இம்முறை இலங்கை தடகளப் போட்டிகளில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த நாங்கள் விரும்பினோம், இது மிகவும் இலகுவான சுவாசிக்கக்கூடிய துணி வகையைப் பயன்படுத்துகிறது, மேலும் ஈரப்பதத்தை உறிஞ்சும் திறன் மற்றும் மேம்பட்ட வசதிக்கான மென்மையான உணர்வையும் தரக்கூடிய விதத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.” என தெரிவித்தார்.

“எங்கள் அணியிலுள்ள வீர வீராங்கனைகளுக்கு அவர்கள் போட்டி இடம்பெறும் நாள் மற்றும் பயிற்சிகளுக்கான ஆடைகளை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைவது மட்டுமல்லாமல், SLAAன் உத்தியோகபூர்வ ஆடை அனுசரணையாளராகவும், எமது தேசிய விளையாட்டு வீரர்களுடன் இணைந்து தயாரிப்புகளை உருவாக்கி, மேம்படுத்துவதற்கும் புத்தாக்கமாக்குவதற்கும் பங்களிக்கும் வகையில் ஆய்வுகளை மேற்கொண்டு சிறந்த தயாரிப்புக்களை வழங்குவதை முன்னிட்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.” என Bodyline Pvt Ltdஇன் பிரதம் நிறைவேற்று அதிகாரி தினேஷ் டி சில்வா தெரிவித்தார்.

MAS மற்றும் SLA நிறுவனங்களுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இலங்கை தடகள சங்கத்தின் தலைவர் பாலித பெர்னாண்டோ மற்றும் Bodyline Trading (Pvt) Ltdஇன் பிரதம நிறைவேற்று அதிகாரி தினேஷ் டி சில்வா ஆகியோர் கையெழுத்திட்டமை குறிப்பிடத்தக்கது.

MAS தொடர்பாக

தெற்காசியாவின் மிகப்பெரிய ஆடை தொழில்நுட்ப நிறுவனமான MAS ஹோல்டிங்ஸ், ஆடை மற்றும் ஜவுளி உற்பத்தியில் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட வடிவமைப்பு முதல் விநியோக தீர்வு வழங்குநர்களில் ஒன்றாகும். 115,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் சமூகம், இன்று, MASஇன் உற்பத்தி ஆலைகள் 15 நாடுகளில் பரவியுள்ளன,

நிறுவப்பட்ட வடிவமைப்பு இடங்கள் உலகம் முழுவதும் உள்ள முக்கிய நாகரீக ஆடை அலங்கார மத்திய நிலையங்களில் வைக்கப்பட்டுள்ளன.

மாறும் மற்றும் எப்போதும் மாறிவரும் தொழில்துறையின் தேவைகளைப் பூர்த்திசெய்து, MAS கோப்புறை அதிவேகமாக விரிவடைந்துள்ளது பிராண்டுகள், அணியக்கூடிய தொழில்நுட்பம், FemTech, Start-ups மற்றும் Fabric Parksகளை உலகளவில் கொண்டுள்ளது.

Previous Post

இலங்கை வீர, வீராங்கனைகள் 7 வகையான போட்டிகளில் நாளை பங்கேற்பு

Next Post

தனுஷின் ‘வாத்தி’ ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியீடு

Next Post
தனுஷின் ‘வாத்தி’ ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியீடு

தனுஷின் 'வாத்தி' ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures