Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மைத்திரியின் வீடு ரணிலுக்கு!

July 25, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
ஜனாதிபதி ரணில் வீட்டின் மீது தாக்குதல் | காணொளிகள் இருப்பின்  ‘வட்ஸ்அப்’ செய்யுங்கள் |  வேண்டுகோள்

முன்னாள் ஜனாதிபதியும் தர்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக  இருந்த காலப்பகுதியில், அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலமாக பயன்படுத்திய  கொழும்பு , பெஜட் வீதியில் அமைந்துள்ள வீட்டை, தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை ஆகியன போராட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்ட பின்னர் அங்கு  இலட்சக்கணக்கான மக்கள் சென்றுவந்த பின்னணியில் அவை சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந் நிலையில்  அம்மாளிகைகள் தொடர்பில் சட்ட நடவடிக்கைகளும்  திருத்த வேலைகலும்  முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில்,  அவற்றுக்கு ஜனாதிபதியோ பிரதமரோ வதிவதற்கு செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது.

இந் நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லமும் தீ வைத்து சேதப்பட்டுத்தப்பட்டுள்ள பின்னணியில் அவர் தற்போது பாதுகாப்புப் பிரிவினரின் பூரண பாதுகாப்பில், பாதுகாப்பான இடமொன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறான நிலையிலேயே தற்காலிகமாக,   ஜனாதிபதி ரணிலுக்கு பெஜட் வீதி வீட்டை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

முன்னதாக மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக  இருந்த காலப்பகுதியில், அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலமாக பயன்படுத்திய  கொழும்பு , பெஜட் வீதியில் அமைந்துள்ள  வீட்டை,  ஜனாதிபதி பதவியிலிருந்து ஓய்வுபெற்ற பின்னரும் தொடர்ந்தும் அவருக்கு சொந்தமாக்கிக்கொள்ளும் வகையில் அமைச்சரவை ஊடாக முன்னெடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு உயர் நீதிமன்றம்  கடந்த மார்ச் 29 ஆம் திகதி  இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தது.

இதனையடுத்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பு பெஜட் வீதியில் அமைந்துள்ள  வீட்டிலிருந்து வெளியறினார்.

நீதியரசர் ப்ரீத்தி பத்மன் சுரசேன தலைமையிலான யசந்த கோதாகொட, மஹிந்த சமயவர்தன ஆகிய நீதியரசர்களை உள்ளடக்கிய  நீதியரசர்கள் குழாமே இந்த இடைக்கால தடை உத்தரவைப் பிறப்பித்தது. 

இந்த இடைக்கால தடை உத்தரவானது,  பிறப்பிக்கப்பட்ட தினமான  மார்ச் 29  ஆம் திகதியிலிருந்து நான்கு வாரங்களின் பின்னர் அமுலகும் வண்ணம் பிறப்பிக்கப்பட்டது.

அதனால் பெஜட் வீதி வீட்டில் தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதியால் தங்கியிருக்க முடியாத நிலை ஏற்பட்ட நிலையில், புத்தாண்டின் பின்னர் அவர் அவ்வீட்டிலிருந்து வெளியேறுவதாக  அறிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கொழும்பில் மற்றொரு வீட்டினை அரசாங்கம் வழங்கியுள்ள நிலையிலேயே, பெஜட் வீதி வீட்டை விட்டு அவர் வெளியேறி, புதிய வீட்டில் தங்கியுள்ளார்..

பெஜட் வீதியில் அமைந்துள்ள  வீட்டை,  ஜனாதிபதி பதவியிலிருந்து ஓய்வுபெற்ற பின்னரும் தொடர்ந்தும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு  சொந்தமாக்கிக்கொள்ளும் வகையில்  அமைச்சரவை ஊடாக முன்னெடுக்கப்பட்ட தீர்மானம்  அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாக  தீர்ப்பளிக்குமாறு கோரி மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம் மற்றும் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர்  பாக்கியசோதி சரவணமுத்துவினால் இந்த அடிப்படை உரிமை மீறல் மனு  தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மனுவின் பிரதிவாதிகளாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தற்போதைய அமைச்சரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

1986 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க ஜனாதிபதிகளின் உரிமைகள் சட்டம் பிரகாரம் ஓய்வுபெறும் ஜனாதிபதிகளுக்கு வீடுகள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Previous Post

4 ஆவது கொவிட் அலை பரவும் அபாயம் : மீள முகக்கவசம் அணியவும் – GMOA

Next Post

மூன்று மாதங்களில் தீர்வு வேண்டும் – ஜனாதிபதியிடம் கோரிக்கை

Next Post
பொருளாதார, அரசியல் நெருக்கடி | சர்வதேசம் நாட்டை துண்டாடலாம்! | ரத்ன தேரர்

மூன்று மாதங்களில் தீர்வு வேண்டும் - ஜனாதிபதியிடம் கோரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

விஜயின் கருத்தால் யாழ் மக்களுக்காக கொதித்தெழுந்த தேரர்

பயிர்கடன் குறித்து முதல்வர் விடுத்த அதிரடி உத்தரவு

June 18, 2026
நிதி முறைக்கேடு வழக்கில் பசில் ராஜபக்சவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

நிதி முறைக்கேடு வழக்கில் பசில் ராஜபக்சவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

June 18, 2026
நடிகர் பவிஷ் நாராயண் நடிக்கும் ‘லவ் ஓ லவ் ‘படத்தின் டீசர் வெளியீடு

நடிகர் பவிஷ் நாராயண் நடிக்கும் ‘லவ் ஓ லவ் ‘படத்தின் டீசர் வெளியீடு

June 18, 2026
மகிந்தவை குறிவைக்கவில்லை! அரசாங்க தரப்பு பகிரங்கம்

கோட்டாபய கைது : அமைச்சர் நலிந்த வெளியிட்ட அறிவிப்பு

June 18, 2026

Recent News

விஜயின் கருத்தால் யாழ் மக்களுக்காக கொதித்தெழுந்த தேரர்

பயிர்கடன் குறித்து முதல்வர் விடுத்த அதிரடி உத்தரவு

June 18, 2026
நிதி முறைக்கேடு வழக்கில் பசில் ராஜபக்சவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

நிதி முறைக்கேடு வழக்கில் பசில் ராஜபக்சவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

June 18, 2026
நடிகர் பவிஷ் நாராயண் நடிக்கும் ‘லவ் ஓ லவ் ‘படத்தின் டீசர் வெளியீடு

நடிகர் பவிஷ் நாராயண் நடிக்கும் ‘லவ் ஓ லவ் ‘படத்தின் டீசர் வெளியீடு

June 18, 2026
மகிந்தவை குறிவைக்கவில்லை! அரசாங்க தரப்பு பகிரங்கம்

கோட்டாபய கைது : அமைச்சர் நலிந்த வெளியிட்ட அறிவிப்பு

June 18, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures