Wednesday, September 10, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பிரபாகரனை எதிரி என்றே காட்டினார்கள்! எங்களுக்கே இப்படி என்றால் தமிழர்களை எப்படி தாக்கியிருப்பீர்கள்.. சிங்கள இளைஞன் ஆவேசம்

July 25, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
பிரபாகரனை எதிரி என்றே காட்டினார்கள்! எங்களுக்கே இப்படி என்றால் தமிழர்களை எப்படி தாக்கியிருப்பீர்கள்.. சிங்கள இளைஞன் ஆவேசம்

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை எங்களுக்கு எதிரி என்றே எமக்கு தொலைக்காட்சியில் காட்டினார்கள் என்று சிங்கள இளைஞன் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீது கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், அது தொடர்பில் சிங்கள இளைஞன் ஒருவர் காணொளி வெளியிட்டு தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.

அதில்,

https://youtube.com/watch?v=HDZ37uaz0RQ

வடக்கில் உள்ள மக்களை இப்படிதான் தாக்கி இருப்பார்கள் என்ற சந்தேகம் எமக்கு ஏற்பட்டுள்ளது. இந்த (ஜனாதிபதி செயலகம்) இடத்தில் சாதாரண, அமைதியான மக்களே இருந்தனர்.

இங்கிருந்த அமைதியான மக்களை தாக்கினார்கள் என்றால், இந்த ராஜபக்ச அரசாங்கம் வடக்கு, கிழக்கு மக்களை எப்படி நடத்தியிருக்கும். இதனால், வடக்கு, கிழக்கு மக்கள் எம்மீது ஆத்திரம் கொண்டிருப்பது நியாயமானது அல்லவா.

வடக்கு, கிழக்கில் தாக்குதல் நடத்தும் போது, நாம் இங்கு போர் வெற்றி கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்தோம். போர் வெற்றிகளையும் பிரபாகரன் எதிரி என்றே எமக்கு தொலைக்காட்சிகளில் காட்டினர்.

மக்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டது, வடக்கு, கிழக்கில் சாதாரண மக்களை தாக்கினர் என்று கூறினார்கள். நீங்கள்(படையினர்) இப்படி தாக்கி இருக்க மாட்டீர்கள் என்று எப்படி நாங்கள் தற்போது நம்புவது.

இராணுவத்தினர், முப்படையினரும் வந்து இங்குள்ள( ஜனாதிபதி செயலகம்) சாதாரண மக்களை மோசமாக தாக்கினர். வடக்கு, கிழக்கை புலிகள், விடுதலைப்புலிகள் என பிரித்தனர். இப்போது என்ன சொல்ல போகிறீர்கள். தற்போதாவது தயாராக இருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

முதலாம் இணைப்பு

தென்னிலங்கையில் இடம்பெறும் அரசியல் விளையாட்டுக்கள் சிங்களவர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியதுடன், தமிழர்கள் தொடர்பான சாதக நிலைப்பாடுகளும் தென்படத் தொடங்கியுள்ளன.

நேற்றையதினம் காலிமுகத்திடலில் கடற்படையின் வெறியாட்டம் சிங்களவர்கள் என்றும் எதிர்பார்க்காத ஒன்றாகும். அங்கிருந்தவர்கள் மீது கடற்படையினர் மிலேச்சத்தனமாக தாக்கப்பட்டதுடன், பலர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

கடற்படையினர் அட்டகாசம்

பிரபாகரனை எதிரி என்றே காட்டினார்கள்! எங்களுக்கே இப்படி என்றால் தமிழர்களை எப்படி தாக்கியிருப்பீர்கள்.. சிங்கள இளைஞன் ஆவேசம் | Information Published By A Sinhalese Youth

இவ்வாறான தாக்குதலின் அடிப்படையில் காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டங்களின் ஒருங்கிணைப்பாளர்களின் ஒருவரான டிலான் சேனநாயக்க வெளியிட்ட தகவல் சிங்கள மக்களை சிந்திக்க வைத்துள்ளது.

ஆர்ப்பாட்டக்களத்திலிருந்து சமூக வலைத்தளம் ஊடாக கருத்து வெளியிடுகையில், “எம்மை இவ்வளவு மோசமாக தாக்குகின்றார்கள் என்றால் தமிழர்களை எவ்வாறு இராணுவத்தினர் தாக்கியிருப்பார்கள்.

போரில் மக்கள் செத்து மடியும் போது நாங்கள் போர் வெற்றி கொண்டாடினோம். அப்படி என்றால் நாம் எப்படி முட்டாளாக்கப்பட்டு தமிழ்களை புலிகள் என்று ஒதுக்கியிருப்போம். தொலைகாட்சியில் காட்டப்பட்ட விடயங்களை வைத்து பிரபாகரன் மீது எங்களுக்கு கோபத்தை ஏற்படுத்தினார்கள்.

தமிழர்களை கொடுமைப்படுத்தும் இராணுவம்

பிரபாகரனை எதிரி என்றே காட்டினார்கள்! எங்களுக்கே இப்படி என்றால் தமிழர்களை எப்படி தாக்கியிருப்பீர்கள்.. சிங்கள இளைஞன் ஆவேசம் | Information Published By A Sinhalese Youth

நாங்களும் அவர்களை புலிகள், தீவிரவாதிகள் என ஒதுக்கி வைத்தோம். அப்படி என்றால் சிங்கள மக்கள் மீதான தமிழர்களின் கோபத்தில் நியாயம் உள்ளது. இராணுவத்தின் செயற்பாடு அவ்வாறான நிலையில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

டிலான் வெளியிட்ட காணொளிக்கு பெருந்தொகையான சிங்களவர்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் தமது பின்னூட்டங்களை வெளியிட்டுள்ளனர். காலி முகத்திடலில் இராணுவத்தின் வெளியாட்டத்திற்கு ஐ.நா சபை உட்பட பல மனித உரிமை அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

கோத்தபாய ராஜபக்சவை கைதுசெய்யவேண்டும் – சிங்கப்பூர் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் சர்வதேச அமைப்பு குற்றவியல் முறைப்பாடு

Next Post

பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பம் 

Next Post
பாடசாலைகள், பல்கலைகள், தனியார் வகுப்புகள்: மீள ஆரம்பிக்கும் திகதி பற்றி முடிவு எதுவுமில்லை

பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பம் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures