Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வட மாகாணத்திலிருந்து தேசிய அணிக்கு தெரிவான முதலாவது குத்துச்சண்டை வீரர் விற்றலி நிக்லஸ்

July 21, 2022
in News, Sports
0
வட மாகாணத்திலிருந்து தேசிய அணிக்கு தெரிவான முதலாவது குத்துச்சண்டை வீரர் விற்றலி நிக்லஸ்

ஒவ்வொரு ஆணின் வெற்றியின் பின்னால் ஒரு பெண் இருப்பார் என்பது முதுமொழி. அதற்கு இணங்க, விற்றலி நிக்லஸின் வெற்றியின் பின்னணியில் இருப்பவர் அவரது சொந்த சகோதரி கிறிஸ்டினாவே அன்றி வேறு யாருமல்லர்.

கிளிநொச்சி மாவட்டத்திலும் வட மாகாணத்திலும் பெண்களுக்கான ஈட்டி எறிதலில் புகழ்பெற்றவர் கிறிஸ்டினா. அவர் குத்துச்சண்டையிலும் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபட்டுவந்தார். சகோதரி கிறிஸ்டினா குத்துச்சண்டையில் ஈடுபட்டபோதெல்லாம் அவருக்கு பாதுகாப்பாகசென்ற நிக்லாஸுக்கும் குத்துச்சண்டையில் ஈடுபடவேண்டும் என்ற ஆர்வம் பிறந்தது.

சகோதரிக்கு பயிற்சி அளித்தவர்கள் நிக்லஸின் உடல்வாகை பார்த்ததும் அவர் குத்துச்சண்டைக்கு பொருத்தமானவர் என அடையாளம் கண்டதுடன் அவரை குத்துச் சண்டையில் ஈடுபடுமாறும் ஊக்குவித்தனர்.

இதனிடையே சிறு பராயத்தில் ஆங்கில திரைப்படங்களில் இடம்பெறும் குத்துச்சண்டைப் போட்டிகளைப் பார்த்து தானாகவே குத்துச்சண்டை நுட்பங்களைக் கற்றுக்கொண்டதாக நிக்லஸ் கூறினார்..

இந் நிலையில், சகோதரியின் வேண்டுகோளுக்கு இணங்க கிளிநொச்சியில் 2013இல் நடைபெற்ற குத்துச்சண்டை தேர்வில்  நிக்லஸ்   பங்குகொண்டார்.

அங்குதான் அவரது குத்துச்சண்டை வாழ்க்கை ஆரம்பமானது. அதன் பின்னர் குத்துச் சண்டையில் அற்புதமான ஆற்றல்களை வெளிப்டுத்தி பல்வேறு வெற்றிகளை ஈட்டிய நிக்லஸ், தேசிய அணிக்கு  வட மாகாணத்திலிருந்து தெரிவான முதலாவது குத்துச்சண்டை வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்தார்.

இன்னும் சில தினங்களில் இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ள பேர்மிங்ஹாம் 2022 பொதுநலவாய விளையாட்டு விழாவில் பங்குபற்றவுள்ள நிக்கலஸ், தனது கன்னி முயற்சியில் பொதுநலவாய தங்கப் பதக்கத்தை சுவீகரிக்க கங்கணம் பூண்டுள்ளார்.

அத்துடன் பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழாவுக்கு தெரிவானால் அங்கும் இலங்கைக்கு தங்கப் பதக்கத்தை வென்று கொடுக்க முயற்சிப்பதாக கிளிநொச்சி பிரமந்தனாறு மகா வித்தியலாயத்தில் கல்வி பயின்ற நிக்லஸ் தெரிவித்தார்.

‘கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து என்னை தேர்ந்தெடுத்தவர் இலங்கை குத்துச்சண்டை சங்கத் தலைவரும் பயிற்றுநருமான டயான் கோமஸ் ஆவார். நான் பாடசாலையில் கல்வி கற்றபோது எனது சகோதரியின் உந்துதலால்தான் நான் குத்துச்சண்டையில் ஈடுபடத் தொடங்கினேன். எனது சகோதரி பயிற்சிகளுக்கு செல்லும்போது நான் அவருக்கு   துணையாக செல்வேன்’ என நிக்லஸ் தெரிவித்தார்.

ஒரு முறை பயிற்றுநர் ஒருவர் என்னைப் பார்த்து ‘நீங்களும் குத்துச்சண்டையில் ஈடுபடலாம் தம்பி’ என தூய தமிழில் சொன்னபோது நான் அடைந்த ஆனந்தத்துக்கு அளவே இல்லை.

‘அதன் பின்னர் 2014இல் நான் தீவிர பயிற்சியில் ஈடுபட்டேன். 6 மாதங்களே பயிற்சிபெற்ற நிலையில் கனிஷ்ட தேசிய குத்துச் சண்டைப் போட்டியில் 69 கிலோ கிராம் எடைப் பிரிவில் எனது முதல்  முயற்சியிலேயே வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தேன். அதுதான் தேசிய மட்ட குத்துச்சண்டை போட்டியில் வட மாகாணத்துக்கு கிடைத்த முதலாவது பதக்கம்’ என்றார் நிக்லஸ்.

அன்றிலிருந்து பல்வேறு குத்துச்சண்டைப் போட்டிகளில் 69, 75, 81 ஆகிய கிலோ கிராம் எடைப் பிரிவுகளில் பங்குபற்றிவந்த இராணுவ குத்துச் சண்டை கழகத்தைச் சேர்ந்த நிக்லஸ் தொடர்ச்சியாக தங்கப் பதக்கங்களை வென்று பலத்த பாராட்டைப் பெற்றார்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் 71 கிலோ கிராம் எடைப் பிரிவில் போட்டியிட்டு தங்கப் பதக்கத்தை சுவீகரித்த நிக்லஸ், இந்த வருடம் நடைபெற்ற கிளிபர்ட் கிண்ண குத்துச்சண்டைப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.

பொதுநலவாய விளையாட்டு விழாவுக்கான தேர்வு போட்டியாகவும் கிளிபர்ட் கிண்ண குத்துச்சண்டை போட்டி அமைந்ததுடன் அதில் நிக்லஸ் வெளிப்படுத்திய ஆற்றல் அவருக்கு இயல்பாகவே பேர்மிங்ஹாம் செல்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுத்தது.

‘பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கை சார்பாக குத்துச்சண்டை போட்டியில் பங்குபற்ற கிடைத்ததையிட்டு பெருமகிழ்ச்சி அடைகின்றேன். இந்தப் போட்டியில் இலங்கைக்கு  தங்கப் பதக்கம் வென்றுகொடுப்பதே எனது இலட்சியம் ஆகும். அத்துடன் இன்னும் 2 வருடங்களில் பாரிஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டு விழாவிலும் பங்குபற்றி தங்கப் பதக்கத்தை சுவீகரிக்கும் நோக்கத்துடன் கடும் பயிற்சியில் ஈடுபடவுள்ளேன்’ என்றார் நிக்லஸ்.

கிளிநொச்சி, தர்மபுரம், புன்னைநீராவி நாதன் வீடமைப்பு திட்டத்தைச் சேர்ந்த நிக்லஸ், தற்போது இராணுவ குத்துச் சண்டை அணியில் இடம்பெறுகிறார்.

‘சிறுபராயத்திலிருந்தே குத்துச்சண்டையில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வம் இருந்ததால் நான் யூ டியூப்களில் நிறைய குத்துச் சண்டைப் போட்டிகளைப் பார்த்து அவற்றின் மூலம் பல நுட்பங்களைக் கற்றுக்கொண்டேன். அத்துடன் உள்ளூர் பயிற்றுநர்கள் பலரிடம் பயிற்சிபெற்றதால் குத்துச்சண்டைக்கு தேவையான நுட்பத்துடன் கூடிய பல உபாயங்களையும் கற்றுக்கொண்டேன். இதன் காரணமாக குத்துச் சண்டை போட்டிகளில் எதிராளிகளை இலகுவாக வெற்றி கொள்ளக்கூடியதாக இருக்கின்றது. இவை அனைத்தும் எனது குத்துச் சண்டை வாழ்க்கையில் திருப்பத்தையும் பெரு முன்னேற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது’ என நிக்லஸ் குறிப்பிட்டார்.

இலங்கையில் கிரிக்கெட் பிரபல்யமான போதிலும் தனது மாவட்டத்தில் பிரபல விளையாட்டுகளில் ஆர்வம் செலுத்தப்படுவது குறைவு என சுட்டிக்காட்டிய அவர், ‘பாடசாலை மட்டத்திலிருந்தே குத்துச்சண்டையை அறிமுகப்படுத்தி இளைஞர், யுவதிகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினால் அவ் விளையாட்டு பிரபல்யம் அடைவதுடன் பல சிறந்த வீரர்களும் உருவாகுவார்கள்.

‘இளைஞர், யுவதிகள் மத்தியில் ஆற்றல், ஆர்வம், விடாமுயற்சி என்பன தாராளமாக இருக்கின்றது. அவற்றையெல்லாம் வெளிகொணர முறையான திட்டங்கள் அவசியம்.  நாடு முழுவதும்   அடிக்கடி   போட்டிகளை ஏற்பாடு செய்து  நடத்தினால் குத்துச் சண்டையில் வரலாறு படைக்கக் கூடியதாக இருக்கும்’ என சர்வதேச மட்டத்தில் சாதிக்க துடிக்கும் நிக்லஸ் கூறினார்.

கடந்த 6 வருடங்களாக உள்ளூர் குத்துச்சண்டை போட்டிகளில் பங்குபற்றி புகழீட்டிய நிக்லஸ் பங்குபற்றவுள்ள முதலாவது சர்வதேச போட்டி பேர்மிங்ஹாம் 2022 பொதுநலவாய விளையாட்டு விழாவாகும். அங்கு குத்துச்சண்டைப் போட்டியில் நிக்லஸ் பொதுநலவாய பதக்கம் வென்று தாய் நாட்டிற்கு புகழீட்டிக் கொடுக்க வேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாகும்.

பேர்மிங்ஹாம் 2022 பொதுநலவாய விளையாட்டு விழா எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெவுள்ள தொடக்க விழா வைபவத்துடன் ஆரம்பமாகவுள்ளது.  72 நாடுகளைச் சேர்ந்த சுமார் 50000 வீர, வீராங்கனைகள்  22 வகையான விளையாட்டு போட்டிகளில் 280 தங்கப் பதக்கங்களுக்காக போட்டியிடவுள்ளனர்.

Previous Post

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

Next Post

உலக அளவில் குரங்கு அம்மை நோயால் 14 ஆயிரம் பேர் பாதிப்பு | 5 பேர் உயிரிழப்பு | உலக சுகாதார ஸ்தாபனம்

Next Post
டெல்டா தொற்று 130 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியிருக்கிறது – உலக சுகாதார ஸ்தாபனம்

உலக அளவில் குரங்கு அம்மை நோயால் 14 ஆயிரம் பேர் பாதிப்பு | 5 பேர் உயிரிழப்பு | உலக சுகாதார ஸ்தாபனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

தங்க விலையில் சடுதியான மாற்றம் : வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல்

ஒரே நாளில் 6,000 ரூபாயினால் அதிகரித்த தங்க விலை

June 16, 2026
புனித தலமான காசி பின்னணியில் நடிகை மதுபாலாவின் ‘சின்ன சின்ன ஆசை ‘

புனித தலமான காசி பின்னணியில் நடிகை மதுபாலாவின் ‘சின்ன சின்ன ஆசை ‘

June 16, 2026
நிழல் – திரைப்பட விமர்சனம்

நிழல் – திரைப்பட விமர்சனம்

June 15, 2026
பீபா உலகக் கிண்ணப் போட்டியை கடைசி நேரத்தில் சமன் செய்தது ஜப்பான் ; சுவீடன், ஐவரி கோஸ்ட் வெற்றி

பீபா உலகக் கிண்ணப் போட்டியை கடைசி நேரத்தில் சமன் செய்தது ஜப்பான் ; சுவீடன், ஐவரி கோஸ்ட் வெற்றி

June 15, 2026

Recent News

தங்க விலையில் சடுதியான மாற்றம் : வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல்

ஒரே நாளில் 6,000 ரூபாயினால் அதிகரித்த தங்க விலை

June 16, 2026
புனித தலமான காசி பின்னணியில் நடிகை மதுபாலாவின் ‘சின்ன சின்ன ஆசை ‘

புனித தலமான காசி பின்னணியில் நடிகை மதுபாலாவின் ‘சின்ன சின்ன ஆசை ‘

June 16, 2026
நிழல் – திரைப்பட விமர்சனம்

நிழல் – திரைப்பட விமர்சனம்

June 15, 2026
பீபா உலகக் கிண்ணப் போட்டியை கடைசி நேரத்தில் சமன் செய்தது ஜப்பான் ; சுவீடன், ஐவரி கோஸ்ட் வெற்றி

பீபா உலகக் கிண்ணப் போட்டியை கடைசி நேரத்தில் சமன் செய்தது ஜப்பான் ; சுவீடன், ஐவரி கோஸ்ட் வெற்றி

June 15, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures