Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பிரதமர் ரணிலின் இல்லத்திற்கு தீ வைப்பு : சந்திரிகா கண்டனம் : சர்வதேசம் கவலை தெரிவிப்பு

July 10, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
அரசுடன் மோத ஓரணியில் திரளுங்கள்  – ரணில் அழைப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கம் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி 09 ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பிரத்தியேக இல்லம் தாக்கப்பட்டு தீ வைக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கண்டனம் தெரிவித்துள்ளதோடு , நோர்வே மற்றும் ஆப்கானிஸ்தான் என்பன கவலை வெளியிட்டுள்ளன.

09 ஆம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலர் கொழும்பு – 5 ஆம் வீதியில் அமைந்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பிரத்தியேக இல்ல வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தின் பின்னர் வீட்டின் மீது தாக்குதல்களையும் மேற்கொள்ளத் தொடங்கினர்.

இதனால் பிரதமரின் இல்ல வளாகத்தில் பொலிஸார் மற்றும் முப்படையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டனர். அத்தோடு ஆர்ப்பாட்டக்காரர்களை அங்கிருந்த கலைப்பதற்காக கண்ணீர்ப்புகை பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டது. எவ்வாறிருப்பினும் அங்கிருந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலந்து செல்லவில்லை.

இதனையடுத்து பிரதமரின் இல்லத்திற்கு தீ மூட்டப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியதோடு , தீப்பற்றியெறியும் காணொளி பதிவுகளும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டன. இதன் போது பிரதமர் பிரத்தியேக இல்லத்தில் அமைக்கப்பட்டிருந்த நூலகம் தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு பிரதமரின் இல்லத்திற்கு தீ வைக்கப்பட்டமைக்கு பல்வேறு தரப்பினரும் தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளனர். காரணம் குறித்த வீட்டினை பிரதமர் கொழும்பு ரோயல் கல்லூரிக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளமையினாலாகும்.

இது தொடர்பில் தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ள சட்டத்தரணி என்.கே.அஷோக்பரன், ‘ரணில் விக்ரமசிங்க தனக்குப்பின்னர் தனது இல்லத்தை அரச பாடசாலையொன்றுக்கு வழங்கியிருக்கின்றார்.

அதுமாத்திரமன்றி அந்த இல்லத்திற்குள் பெறுமதியான புத்தகங்களுடன்கூடிய நூலகம் இருப்பதை அவரது நேர்காணல் காணொளிகளில் கண்டிருக்கிறோம். அத்தகைய இல்லத்திற்குத் தீவைப்பதென்பது மிகமோசமான குற்றச்செயலாகும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது டுவிட்டர் பதிவில் , ‘பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வீடு தீ வைத்து எரிக்கப்பட்டதை  வன்மையாக கண்டிக்கின்றேன்.

ஒரு மோசமான அரசாங்கத்தை விரட்டி, மக்கள் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கான இலக்கை அடைய போராட்டக்காரர்களுக்கு வன்முறை தேவையில்லை.’ என்று குறிப்பிட்டுள்ளார்.

‘அறவழிப் போராட்டத்தில் பெற்றுக்கொண்ட வெற்றியை பின்னடையச் செய்யும் வகையிலான தீ வைப்பு, கொள்ளையிடுதல் போன்ற வன்முறை செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம’ என்று ஜே.வி.பி. தலைவர் அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் இல்லத்திற்கு தீ வைக்கப்பட்டமை தொடர்பில் சர்வதேசமும் கவலை வெளியிட்டுள்ளது. இலங்கைக்கான நோர்வே தூதுவர் தனது டுவிட்டர் பதிவில் , ‘அமைதியான போராட்டங்கள் வன்முறையாக மாறி, பிரதமர்  இல்லம் எரிக்கப்பட்டுள்ளமை கவலைக்குரியது.

எந்தச் சூழலிலும் வன்முறையை நியாயப்படுத்த முடியாது. வன்முறை விரிவடைவதைத் தடுக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொள்கிறோம்.  போராட்டக்காரர்கள் சட்டத்தை தங்கள் கைகளில் எடுக்க வேண்டாம்.’ என்று குறிப்பிட்டுள்ளார்.

‘வன்முறை , பொது மற்றும் தனியார் சொத்துக்களை அழிப்பது  நியாயமற்றது.  இலங்கையில் இதுபோன்று பொது ஒழுங்கை மீறுவது நாட்டின் பிரச்சினைகளை ஆழமாக்குகிறது. இது உலகெங்கிலும் உள்ள பல நாடுகளை பாதிக்கிறது.  தேசிய ஒற்றுமை மற்றும் சர்வதேச உதவி மூலம் மட்டுமே தீர்வுகள் கிடைக்கும் ‘ என ஆப்கானிஸ்தான் தூதுவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

பிரதமரின் வீட்டிற்கு தீ மூட்டிய மூவர் கைது

Next Post

அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்தார் தம்மிக்க பெரேரா

Next Post
அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்தார் தம்மிக்க பெரேரா

அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்தார் தம்மிக்க பெரேரா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

புனித தலமான காசி பின்னணியில் நடிகை மதுபாலாவின் ‘சின்ன சின்ன ஆசை ‘

புனித தலமான காசி பின்னணியில் நடிகை மதுபாலாவின் ‘சின்ன சின்ன ஆசை ‘

June 16, 2026
நிழல் – திரைப்பட விமர்சனம்

நிழல் – திரைப்பட விமர்சனம்

June 15, 2026
பீபா உலகக் கிண்ணப் போட்டியை கடைசி நேரத்தில் சமன் செய்தது ஜப்பான் ; சுவீடன், ஐவரி கோஸ்ட் வெற்றி

பீபா உலகக் கிண்ணப் போட்டியை கடைசி நேரத்தில் சமன் செய்தது ஜப்பான் ; சுவீடன், ஐவரி கோஸ்ட் வெற்றி

June 15, 2026
மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை : நில அடையாளம், இன அரசியல், வாழ்வாதாரம் | நூல் அறிமுகம்

மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை : நில அடையாளம், இன அரசியல், வாழ்வாதாரம் | நூல் அறிமுகம்

June 15, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures