மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அவர்கள் இருவரும் அறிக்கையொன்றை விடுத்து தமது இராஜிநாமாவை அறிவித்துள்ளனர்.
அனைத்துக் கட்சி அரசாங்கத்தை உருவாக்கி மக்களுக்கு விரைவான நிவாரணம் வழங்கும் நோக்கில் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மற்றும் சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் பதவிகளில் இருந்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இராஜினாமா செய்யவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.