பொலன்னறுவை – வெலிகந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கைதி ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் 4 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு சந்தேகத்தின் பேரில் 2 இராணுவ வீரர்களும் விமானப் படையைச் சேர்ந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் குறித்த கைதி இறந்ததையடுத்து அங்கு ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து அங்கிருந்த கைதிகள் பலர் தப்பியோடிய நிலையில், 679 பேர் மீண்டும் சரணடைந்த நிலையில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டனர்.
மேலும் 44 பேரைத் தேடும் நடவடிக்கை தொடர்ந்து இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.