Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

எம்மை சுற்றியுள்ள மனிதர்களை அடையாளப்படுத்தும் ‘மாமனிதன்’

June 19, 2022
in Cinema, News
0
எம்மை சுற்றியுள்ள மனிதர்களை அடையாளப்படுத்தும் ‘மாமனிதன்’

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி கதையின் நாயகனாக நடித்திருக்கும் மாமனிதன் ஜூன் 24ஆம் திகதியன்று வெளியாகிறது. இந்த திரைப்படம் ‘எம்மை சுற்றியுள்ள மனிதர்களில் மாமனிதன் யார்? என்பதை அடையாளப்படுத்தும்’ என இப்படத்தின் இயக்குநர் சீனு ராமசாமி தெரிவித்திருக்கிறார்.

‘காத்துவாக்குல இரண்டு காதல்’, ‘விக்ரம்’ என வரிசையாக இரண்டு மெகா ஹிட் திரைப்படங்களில் முதன்மையான பங்களிப்பை அளித்திருக்கும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் தயாராகி இருக்கும் திரைப்படம் ‘மாமனிதன்’. இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் தயாரான இந்த திரைப்படம் கொரோனாத் தொற்று பாதிப்பிற்கு பிறகு ஜூன் 24ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகிறது.

படத்தைப் பற்றி இயக்குநர் சீனு ராமசாமி பேசுகையில், ” இசைஞானி இளையராஜா- இளைய இசைஞானி யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைத்திருக்கும் இந்த திரைப்படத்தில் விஜயசேதுபதி கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். 20 ஆண்டுகால வாழ்வியலை சொல்லும் இந்த திரைப்படத்தில் எம்முடன் வாழ்ந்து வரும் மனிதர்களில் மாமனிதன் யார்? என்பதை அடையாளப்படுத்தும் திரை கதையாக உருவாகி இருக்கிறது. இந்த திரைப்படத்தில் காட்சிகள் படமாக்கப்பட்ட பிறகு தான் பாடல்கள் உருவாக்கப்பட்டது. இந்த திரைப்படத்தில் நாயகி இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடிக்க வேண்டும் என்று இருந்தது. இதற்காக பல நடிகைகள் தயக்கம் காட்டிய போது, நடிகை காயத்ரி இந்த சவாலான வேடத்தை ஏற்று நடித்திருக்கிறார். இந்தப் படம் வெளியான பிறகு நிச்சயம் அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைக்கும் என நம்பிக்கை இருக்கிறது. இசைஞானி இளையராஜா பிறந்த மண்ணில் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறோம். அத்துடன் இந்த திரைப்படத்தை திருமதி ஜீவா இளையராஜாவிற்கு சமர்பித்திருக்கிறேன். இந்த திரைப்படத்தின் மூலமாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி உலகமே திரும்பி பார்க்கும். தமிழகம், கேரளா, உத்திரபிரதேசம் என பல மாநிலங்களில் பயணிக்கும் கதையில், முதன்மை கதாபாத்திரத்திற்கு உயிர்ப்புடன் தன்னுடைய பங்களிப்பை வழங்கியிருக்கிறார் விஜய் சேதுபதி. வாழ்வியல் சார்ந்த இந்த படைப்பை கண்டு ரசிக்கும் ரசிகர்கள் அனைவரும் தங்களது விமர்சனத்தை ஏதேனும் ஒரு வகையில் வெளிப்படுத்த வேண்டும் என பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.

நீண்ட நாட்கள் கிடப்பில் இருந்தாலும், ‘தர்மதுரை’ வெற்றிக்குப் பிறகு தயாரிப்பாளர் ஆர் கே சுரேஷ் -மக்கள் செல்வன் விஜய் சேதுபதி -இயக்குநர் சீனு ராமசாமி ஆகியோரின் கூட்டணி மீண்டும் இதில் இணைந்திருப்பதால் ‘மாமனிதன்’ மாபெரும் வெற்றி பெறும் என திரையுலக வணிகர்கள் அவதானிக்கிறார்கள்.

Previous Post

அத்தியாவசிய சுகாதார சேவைகளுக்கு வெள்ளிக்கிழமைகளில் எரிபொருள் வழங்கத் திட்டம்

Next Post

சைக்கிளில் பயணிப்பவர்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

Next Post
சைக்கிளில் பயணிப்பவர்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

சைக்கிளில் பயணிப்பவர்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

அரசு எனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிச் செல்கிறது | சாணக்கியன்

துறைமுக நகரம் : அரசுக்கு வருமானமா? மக்களுக்கு வேலைவாய்ப்பா? அல்லது நாமலின் விளையாட்டு மைதானமா? – சபையில்  சாணக்கியன் 

July 11, 2026
வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

தமது காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள் மயிலிட்டியில் போராட்டம்

July 11, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதியின் அவதூறு வழக்கு! நீதிமன்றின் உத்தரவு

July 10, 2026
யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

July 10, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures