Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கையடக்கத்தொலைபேசிகளை அதிக நேரம் பார்வையிடுவது வாழ்நாளைக் குறைக்கும் – அமெரிக்க ஆய்வாளர்கள்

June 12, 2022
in News, World, முக்கிய செய்திகள்
0
குழந்தைகளின் கைகளை பாதிக்கும் செல்போன் விளையாட்டு

அதிக நேரம் ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசி மற்றும் கணினித் திரைகளைப் பார்வையிடுவது ஒருவரது கண்களை மட்டுமல்லாது  ஏனைய உடல் செயற்கிரமங்களையும் பாதித்து  வாழ்நாளைக் குறைப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

அமெரிக்க கலிபோர்னிய  மாநிலத்திலுள்ள  இலாபநோக்கற்ற  பக் நிறுவகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்களால் வயோதிபத்துடன் தொடர்புபட்ட நோய்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில்  கண்கள் தொடர்ந்து  ஒளியைப் பார்ப்பது ஏனைய  உடல் உறுப்புகளின் நாளாந்த செயற்பாடுகளின் ஒழுங்கைப்  பாதித்து உடலில் ஏற்பட்ட நாள்பட்ட நோயை மேலும் மோசமடையச் செய்வது கண்டறியப்பட்டுள்ளது.

கண்கள் ஏனைய உடல் உறுப்புகளைப் போல் அல்லாது வெளி உலகிற்கு பெருமளவில் வெ ளிப்படும் உறுப்பாகக் காணப்படுவதால் அவற்றின் நோயெதிர்ப்பு தன்மை அதிகளவில் செயற்றிறன் மிக்கதாக உள்ளது. 

இந்நிலையில் மேற்படி பாதுகாப்பு செயற்றிறனில் ஏற்படும் இடையூறுகள் உள்ளக உடல் செயற்கிரமங்களைப் பாதிப்பனவாக உள்ளன. இதன் காரணமாக  உடலின் ஏனைய உடல் உறுப்புகளும் பாதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது.

இலத்திரனியல் உலகின் அங்கமாகவுள்ள கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் கணினிகள் உள்ளடங்கலான திரைகள்  அளவுக்கதிகமான  ஒளியை வெளிப்படுத்துவதன் காரணமாக அவற்றை நீண்ட நேரம் பார்வையிடுவது காலப் போக்கில் மோசமான உடல் நலப் பாதிப்புகளை ஏற்படுத்தும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

கணினி மற்றும் கையடக்கத்தொலைபேசித் திரைகளை  இரவு நேரத்தில் தொடர்ச்சியாக நீண்ட நேரம் அவதானிப்பது  ஒளி மாசாக்க நிலையைத் தோற்றுவித்து ஏனைய உடல் உறுப்புகளின் இயக்கம் தொடர்பான சமநிலைக்கு குந்தகம் விளைவிப்பதாக உள்ளதாக மேற்படி ஆய்வில் பங்கேற்ற பேராசிரியரும்  போஷணை நிபுணருமான  மருத்துவ கலாநிதி பன்காஜ் கபாஹி தெரிவிக்கிறார்.

Previous Post

முகத்தின் ஒரு பக்க செயல்பாடுகளை இழந்த பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபர்

Next Post

‘இணைந்து பயிரிடுவோம் – நாட்டை வெற்றியடையச் செய்வோம்’ தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தை ஆரம்பிக்க தீர்மானம்

Next Post
‘இணைந்து பயிரிடுவோம் – நாட்டை வெற்றியடையச் செய்வோம்’ தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தை ஆரம்பிக்க தீர்மானம்

'இணைந்து பயிரிடுவோம் - நாட்டை வெற்றியடையச் செய்வோம்' தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தை ஆரம்பிக்க தீர்மானம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

திலீபனின் சிலை வைப்பு விவகாரம்:விடுதலைப் புலிகளை மையப்படுத்தி யாழ். முதல்வரிடம் விசாரணை

திலீபனின் சிலை வைப்பு விவகாரம்:விடுதலைப் புலிகளை மையப்படுத்தி யாழ். முதல்வரிடம் விசாரணை

October 23, 2026
ஆசிய பரா நீச்சலில் இலங்கையின் கலினாவுக்கு வெள்ளிப் பதக்கம் 

ஆசிய பரா நீச்சலில் இலங்கையின் கலினாவுக்கு வெள்ளிப் பதக்கம் 

October 23, 2026
ஹாரர், கொமடி, ஃபேண்டஸி கலந்த இணையத் தொடராக உருவாகும் ‘வர்ண கதைகள்’

ஹாரர், கொமடி, ஃபேண்டஸி கலந்த இணையத் தொடராக உருவாகும் ‘வர்ண கதைகள்’

October 22, 2026
ஆசிய பரா விளையாட்டு விழா 100 மீ. இறுதிப் போட்டியில் தனஞ்சனா நான்காம் இடம்

ஆசிய பரா விளையாட்டு விழா 100 மீ. இறுதிப் போட்டியில் தனஞ்சனா நான்காம் இடம்

October 22, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures