Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

எரியும் மனிதர்கள்

October 5, 2016
in News
0
எரியும் மனிதர்கள்

எரியும் மனிதர்கள்

“எரியும் மனிதர்கள்” இதனைபற்றி நீங்கள் கேள்விபட்டதுண்டா? இல்லையா அப்படி என்றால் உங்களுக்கான கட்டுரைதான் இது !

அது எவ்வாறு மனிதன் தானாக எரிந்துபோக முடியும்? என்ற கேள்வி தற்போது உங்களக்கு தோன்றினால் அது உங்கள் பிழை அல்ல. இவ்வாறான சம்பவங்கள் கடந்த 300 ஆண்டுகளாக நடந்துகொண்டுதான் வருகின்றது. காட்டில் இரண்டு மூங்கில் மரங்கள், ஒன்றுக்கொன்று உரசிக் கொள்வதன் மூலம், காட்டுத்தீ ஏற்படுகின்றது என்பதை நாம் படித்திருப்போம். ஆனால், சற்றும் யூகிக்க முடியாதபடி மனிதன் எப்படி தானாக எரிய முடியும்?

1673 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டு நீதிமன்றம் ஒர் விசித்திரமான வழக்கை சந்தித்தது. கணவன் மனைவிக்கு இடையே சண்டை. இதில் மனைவி தீப்பிடித்து இறந்துவிட்டாள். கொன்றது கணவர் என்பதுதான் வழக்கு. நீண்டநாள் நடந்த இவ்வழக்கில் இறுதி தீர்ப்பானது “கணவர் குற்றமற்றவர். அவர், மனைவியை தீ வைத்து கொலை செய்யவில்லை. அவர் மனைவி தானாகவே தீப்பற்றி எரிந்துபோனார்” என்றே வழங்கப்பட்டது.

மேலும் மருத்துவ பரிசோதனைக் குழுவும் நீதிபதியின் தீர்ப்பை ஆமோதித்திருந்தது. இப்படி மனிதர்கள் தானாக தீப்பற்றி எரிந்துபோவதை “ஸ்பான்டேனியஸ் ஹியூமன் கம்பஷன்” என்று மருத்துவ உலகம் பெயரிட்டது.

இவ்வாறான மற்றோரு சம்பவம் 1951ஆம் ஆண்டு நடந்தது. இம்முறையும் ஒர் பெண்மணிதான். அவர் பெயர் “மேரி ரீசர்” 67 வயதான இந்த மூதாட்டியை பார்க்க அவர்களது உறவினர்கள் வீட்டிற்கு வந்தபோது, வீட்டிற்குள் “மேரி ரீசர்” நாற்காலியில் அமர்ந்தபடி தீப்பிடித்து இறந்துகிடந்தார். இதைப் பார்த்த உறவினர்களுக்கு அதிர்ச்சி. பிரேத பரிசோதனை மற்றும் தடயவியல் பரிசோதனைக்கு பிறகு மருத்துவ அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில் “மேரி ரீசர்” தானாக எரிந்துபோயுள்ளார். அவர் உடலில் 2500 டிகிரி வெப்பம் தாக்கப்பட்டதால் உடல் கருகி இறந்துள்ளார் என காணப்பட்டது.

இது போன்ற சம்பவங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக உலகத்தில் ஏதோ ஒர் மூலையில் நடந்துகொண்டுதான் இருக்கின்றது. இருந்தும் செய்தியை ஆச்சரியமாக படிக்கம் நாங்கள் மறைந்துகிடந்த விபரீதத்தை உணரவில்லை.j

“ஸ்பாண்டேனியஸ் ஹுயூமன் கம்பஷன்” என்ற விபத்து குறித்த தொகுப்பை, 1763ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜோனஸ் டூபாண்ட் என்ற அறிஞர் முதலாவதாக வெளியிட்டார்.

இதன் தாக்கம் மக்களிடையே பரவலாக எழுந்தது. இதைத் தொடர்ந்து 1800ஆம் ஆண்டு, “சார்லஸ் டிக்கன்” என்பவர் “ஸ்பான்டேனியஸ் ஹியூமன் கம்பஷனை” மையக் கருவாகக் கொண்டு “பிளீக் ஹவுஸ்” என்னும் நாவலை எழுதினார்.

பெரும் வரவேற்பைப் பெற்ற இந்நாவலின் நாயகி தானே தீப்பிடித்து இறந்துபோவது போல் கதை சித்தரிக்கப்பட்டிருக்கும். அதில் மதுவில் உள்ள “ஆல்கஹாலின்” அளவு அதிகரிக்கும்போது, உடல் இம்மாதிரி தானாக தீப்பற்றி எரிந்துவிடும் என்ற காரணத்தை சொல்லியிருப்பார். இந்த காரணம் கதைக்காக சொல்லப்பட்டதாக இருந்தாலும், இதில் உண்மை இருப்பதாக மருத்துவ உலகம் இறுதியில் உறுதி செய்தது.

இதுவரை உலகம் முழுவதும் “ஸ்பாண்டேனியஸ் ஹியூமன் கம்பஷன்” மூலம் எரிந்துபோனவர்களில் 80 சதவீதத்தினர் பெண்களே. இவர்களில் பெரும்பாலனவர்கள் மிக அதிகமான உடல் எடையும், அதிக அளவு மது அருந்துபவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். அருந்திய கட்டுக்கடங்காத “ஆல்கஹால்கள்” ஒர் கட்டத்தில் “ஹைட்ரஜனாகவும்”, பற்றி எரியும் எரிவாயுவாகவும் உற்பத்தியாகி, இது முற்றிலும் அதிக தசை கொண்ட உடல் பகுதியில் சேமிக்கப்பட்டிருக்கும்.

உடலில் அளவிற்கு அதிகமான வெப்பமோ அல்லது ஏதோ ஒரு வகையில் லேசான மின்தூண்டல் உட்படும்போது, இந்த எரிவாயு பற்றி எரிய ஆரம்பிக்கின்றது என ஆராய்ச்சியாளர்கள் தங்கள், ஆய்வறிக்கையில் வெளியிட்டுள்ளனர்.

தானாக மனிதன் எரியும் செயல் ஆச்சர்யமூட்டும் செய்தியாக இருந்தாலும், மது உடலை அழிக்கும் என்ற கருத்தையும் இந்தக் கட்டுரை உணர்த்தாமல் இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை.

Previous Post

மறைக்கபட்டதா? அல்லது மறையபட்டதா?

Next Post

கூகுள் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட் போன்: வெளியானது கூகுள் பிக்ஸல்

Next Post
கூகுள் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட் போன்: வெளியானது கூகுள் பிக்ஸல்

கூகுள் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட் போன்: வெளியானது கூகுள் பிக்ஸல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures