Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ரணில் விக்கிரமசிங்கவிற்கு அதிஷ்ட இலாபச்சீட்டு கிடைத்துள்ளது | உதய கம்மன்பில

May 14, 2022
in News, Sri Lanka News
0
நாம் அரசாங்கத்திடம் தோல்வியடைந்ததால் மக்கள் மத்தியில் உண்மையை உரைக்க வேண்டியுள்ளது – கம்மன்பில

அரசியல் தீவிரவாத செயற்பாட்டிற்கு நாட்டு மக்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்திய காரணத்தினால் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகினாரே தவிர சர்வக்கட்சிகளை உள்ளடக்கிய இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கு அல்ல.

Minister Gammanpila assures no shortage of fuel due to closure of refinery  – The Island

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அதிஷ்ட இலாபச்சீட்டு கிடைத்துள்ளது என முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

இலங்கை கம்யூனிசக் கட்சியின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கு ஜனாதிபதி தேர்தலும்,பொதுத்தேர்தலிலும் கிடைக்கப்பெற்ற மக்களாணைக்கு முரணாகவே ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமித்துள்ளார்.

சர்வக்கட்சி தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்திருந்த போதும் அதற்கு பிரதான எதிர்க்கட்சிகளான ஐக்கிய மக்கள் சக்தி,மக்கள் விடுதலை முன்னணி இணக்கம் தெரிவிக்கவில்லை.

இவ்வாறான பின்னணியில் மாற்று நடவடிக்கைகள் ஏதும் இல்லாத காரணத்தினால் ஜனாதிபதி இவ்வாறான தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார்.

சமூக கட்டமைப்பில் தற்போது தோற்றம் பெற்றுள்ள சகல பிரச்சினைகளுக்கும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட அவரது தரப்பினர் மாத்திரம் பொறுப்புக்கூற வேண்டும்.

அரசியல் தீவிரவாத செயற்பாட்டிற்கு நாட்டு மக்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியதை தொடர்ந்து முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகினாரே தவிர சர்வக்கட்சிகளை உள்ளடக்கிய இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கு அல்ல என்பதை தெளிவாக குறிப்பிட்டுக்கொள்ள வேண்டும்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கும் நோக்கம் எமக்கு கிடையாது.

அவர் தலைமையிலான அரசாங்கத்தில் எவ்வித அமைச்சு பதவிகளையும் பொறுப்பேற்க போவதில்லை.

நாட்டுக்கு நன்மை பயக்கும் தீர்மானங்களுக்கு மாத்திரம் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என்றார்.

 

Previous Post

ரணிலால் டொலரின் விற்பனை விலை குறைந்ததா | வெளியான தகவல்

Next Post

கிராமத்திற்கு மின்சாரத்தை துண்டித்துவிட்டு காதலியை சந்தித்த எலக்ட்ரீசியன் | சுவாரசிய சம்பவம்

Next Post
கிராமத்திற்கு மின்சாரத்தை துண்டித்துவிட்டு காதலியை சந்தித்த எலக்ட்ரீசியன் | சுவாரசிய சம்பவம்

கிராமத்திற்கு மின்சாரத்தை துண்டித்துவிட்டு காதலியை சந்தித்த எலக்ட்ரீசியன் | சுவாரசிய சம்பவம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures