இலங்கைக் கிரிக்கெட் நிறுவனம் நடத்தும் லங்கா பிரீமியர் லீக் தொடரின் இயக்குனரான ரவீன் விக்கிரமரட்ன அந்தப் பதவியிலிருந்து விலகியுள்ளதாக இலங்கைக் கிரிக்கெட் நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
லங்கா பிரீமியர் லீக் இரண்டுமுறை அரங்கேறியுள்ளது. இந்தத் தொடருக்கான போட்டித் தலைவராக இலங்கைக் கிரிக்கட் நிறுவனத்தின் உப தலைவர் ரவீன் விக்கிரமரட்ன செயற்பட்டு வந்தார். இவ்வாண்டுக்கான மூன்றாவது லங்கா பிரீமியர் லீக் தொடர் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே ரவீன் போட்டித் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக சமந்த தொடங்வெல நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கைக் கிரிக்கெட் நிறுவனம் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]