Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sri Lanka News

புகையிரத சேவைகள் முழுமையாக ஸ்தம்பிதமடையும் |புகையிரத ஒன்றிணைந்த சேவை சங்கம் எச்சரிக்கை !

April 27, 2022
in Sri Lanka News
0
புகையிரத சேவைகள் முழுமையாக ஸ்தம்பிதமடையும் |புகையிரத ஒன்றிணைந்த சேவை சங்கம் எச்சரிக்கை !

அரசாங்கத்திற்கு எதிராக தீவிரமடைந்துள்ள போராட்டத்தை பலப்படுத்தும் வகையிலும், ஜனாதிபதி உட்பட முழு அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என்பற்கு அழுத்தம் பிரயோகிக்கும் வகையிலும் புதன்கிழமை (27) நள்ளிரவு முதல் 24 மணிநேர பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்பட தீர்மானித்துள்ளோம்.

வியாழக்கிழமை (28) புகையிரத சேவை முழுமையாக ஸ்தம்பிதமடையும் என புகையிரத ஒன்றிணைந்த சேவை சங்கத்தின் செயலாளர் எஸ்.பி விதானகே தெரிவித்தார்.

பணிப்புறக்கணிப்பு போராட்டத்தினால் புகையிரத சேவையை பயன்படுத்தும் பொதுபயணிகள் அசௌகரியங்களுக்கு உள்ளாகுவார்கள் என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.

நாட்டுக்காக ஒருசில கடினமான தீர்மானங்களை முன்னெடுக்க நேரிடும். நாட்டுக்கான எமது போராட்டத்திற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

மருதானையில் உள்ள புகையிரத ஒன்றிணைந்த சேவை சங்கத்தின் காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஜனாதிபதி உட்பட அரசாங்கத்தின் தவறான பொருளாதார முகாமைத்துவத்தின் விளைவை நாட்டு மக்கள் தற்போது எதிர்க்கொள்கிறார்கள்.

வரிசையில் நின்று அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை தற்போது தோற்றம் பெற்றுள்ளன. மக்களாணைக்கு முரணாக செயற்பட்டதன் காரணமாகவே ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ தலைமையிலான மூன்றில் இரண்டு பெரும்பான்மை கொண்ட அரசாங்கத்தை நாட்டு மக்கள் முழுமையாக புறக்கணிக்கிறார்கள்.

புகையிரத தொழிற்சங்கங்கள் பல்வேறு அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களாக உள்ளார்கள்.இருப்பினும் தற்போது அரசியலுக்கு முன்னுரிமை வழங்க முடியாது.

நாட்டை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து காலி முகத்திடலில் இளைஞர்கள் பல நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள நிலையில் தொழிற்சங்கங்களும் அவர்களின் போராட்டத்திற்கு அரசியல் நோக்கமற்ற வகையில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தீர்மானித்து பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்பட தீர்மானித்துள்ளோம்.

புதன்கிழமை (27) நள்ளிரவு வியாழக்கிழமை (28) நள்ளிரவு வரை புகையிரத சேவை முழுமையாக ஸ்தம்பிதமடையும். புகையிரத சேவையில் ஈடுப்படும் 30 தொழிற்சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்படுவதால் புகையிரத சேவை பகுதி அளவில் கூட முன்னெடுக்கப்படமாட்டாது.

புகையிரத சேவை ஸ்தம்பிதமடைவதால் பொது பயணிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதை நன்கு விளங்கிக்கொள்ள முடிகிறது.தொழில் உரிமைகளுக்காக பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடப்படவில்லை.அரசாங்கத்திற்கு அழுத்தம் பிரயோகிக்கும் வகையில் போராட்டத்தில் ஈடுப்பட தீர்மானித்துள்ளோம். எமது போராட்டத்திற்கு பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

Previous Post

மின்கட்டணத்தை அதிகரிக்க அனுமதி வழங்கவில்லை | அமைச்சரின் விருப்பத்திற்கமைய அதிகரிக்க முடியாது

Next Post

அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸிற்கு கொரோனா தொற்று

Next Post
அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸிற்கு கொரோனா தொற்று

அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸிற்கு கொரோனா தொற்று

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

NPP அராங்கத்தின் அமைச்சரவையில் திடீர் மாற்றம்…!

August 30, 2026
‘என்ன விலை’ படத்தின் மூலம் வெள்ளி விழா கொண்டாடும் நடிகர் கருணாஸ்

‘என்ன விலை’ படத்தின் மூலம் வெள்ளி விழா கொண்டாடும் நடிகர் கருணாஸ்

August 30, 2026
ஹிப் ஹொப் தமிழா நடிக்கும் ‘மீசைய முறுக்கு 2’ படத்தின் அப்டேட்

ஹிப் ஹொப் தமிழா நடிக்கும் ‘மீசைய முறுக்கு 2’ படத்தின் அப்டேட்

August 29, 2026
தீர்மானம் மிக்க சுப்பர் லீக் போட்டியில் றினோன் – புளூ ஸ்டார் இன்று மோதுகின்றன

தீர்மானம் மிக்க சுப்பர் லீக் போட்டியில் றினோன் – புளூ ஸ்டார் இன்று மோதுகின்றன

August 29, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures