அடுத்த சில தினங்களில் நியமிக்கப்படவுள்ள அமைச்சரவையில் தான் அமைச்சு பதவியை பெற்றுக்கொள்ள போவதில்லை என முன்னாள் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.
ஏற்பட்டுள்ள நெருக்கடியை தீர்ப்பதற்காக இளையவர்கள் அடங்கிய அமைச்சரவை நியமிக்குமாறு, அவர்களுக்கு இடமளிக்கும் வகையில் தான் அமைச்சரவையின் பொறுப்புகளை ஏற்க போவதில்லை என பந்துல குணவர்தன, ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.
குறுகிய காலத்திற்கு 15 பேர் கொண்ட அமைச்சரவையை நியமிக்குமாறும் நெருக்கடி தீர்ந்த பின்னர், அமைச்சரவைக்கு மேலும் சிலரை நியமிக்க முடியும் எனவும் அவர் யோசனை முன்வைத்துள்ளார்.
அத்துடன் குறுகிய காலத்தில் செய்ய வேண்டிய பல மாற்றங்கள் தொடர்பான யோசனைகளையும் பந்துல, ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் முன் வைத்துள்ளார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]