இந்திய கடனுதவியின் கீழ் இறக்குமதி செய்யவுள்ள 40,000 மெட்ரிக் தொன் அரிசி விரைவில் நாட்டை வந்தடையும் என்று வர்த்தகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வாறு நாட்டை வந்தடையவுள்ள அரிசி தொகையை சதொச விற்பனை நிலையங்களுக்கு வழங்க தீர்மானித்துள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சின் செயலாளர் சந்திரானி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக நாடு மற்றும் கெகுலு ஆகிய அரிசி வகைகள் ஒரு கிலோ கிராம் 110 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று சம்பா அரிசி 130 கிலோவிற்கு விற்பனை செய்யப்படுவதாகவும் செயலாளர் சந்திரானி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும் புத்தாண்டு காலத்தில் மக்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் நாடளாவிய ரீதியில் விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறிருப்பினும் பால்மா விநியோகத்தில் மாத்திரம் நெருக்கடி ஏற்படக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]