Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Health

சர்க்கரை வள்ளிக்கிழங்கும் உடல் எடை இழப்பும்

March 19, 2022
in Health, News
0
சர்க்கரை வள்ளிக்கிழங்கும் உடல் எடை இழப்பும்

வைட்டமின் ஏ மற்றும் சி தவிர, சர்க்கரை வள்ளிக்கிழங்கில் வைட்டமின் பி, மாங்கனீசு, பொட்டாசியம் போன்ற பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் அதிகம் இருக்கிறது.

உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர்களுக்கு உருளைக்கிழங்கு எதிரியாக அமைந்திருக்கும். ஆனால் அதே ரகத்தை சேர்ந்த சர்க்கரைவள்ளிக்கிழங்கு நண்பனாக அமையும். ஏனெனில் சர்க்கரைவள்ளிக்கிழங்கில் நார்ச்சத்து போன்ற ஸ்டார்ச் எதிர்ப்பு பொருள் உள்ளது. அவை உடலில் உறிஞ்சப்படுவதில்லை. கார்போஹைட்ரேட்டுகளுக்கு பதிலாக இதுபோன்ற ஸ்டார்ச் எதிர்ப்பு கொண்ட உணவுகளை சாப்பிடுவது கொழுப்பை எரிக்கும் செயல்முறையை துரிதப்படுத்தும். உடல் எடை இழப்புக்கும் பக்கபலமாக அமையும். மேலும் சர்க்கரைவள்ளிக்கிழங்கை சாப்பிடுவது பசியை கட்டுப்படுத்தும். பசி உணர்வு இன்றி வயிறு நிறைந்த திருப்தியை நீண்ட நேரம் தக்கவைத்துக்கொள்ள முடியும்.

சர்க்கரை வள்ளிக்கிழங்கை தினமும் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.

சர்க்கரைவள்ளிக்கிழங்கு போன்ற ஆன்டி ஆக்சிடென்ட் உணவுகளை சாப்பிடுவது செல்கள் முதிர்ச்சி அடைவதை தடுக்கும். இதன் மூலம் வயதான தோற்றம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் தவிர்க்கப்படும். மேலும் நாள்பட்ட நோய்களை தடுக்கவும் உதவும். வழக்கமான சர்க்கரைவள்ளிக்கிழங்குடன் ஒப்பிடும்போது ஊதா நிற சர்க்கரைவள்ளிக்கிழங்குஆன்டி ஆக்சிடென்ட் நன்மைகளை அதிகம் கொண்டிருக்கும்.

வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி ஆகியவை ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு தேவையான வைட்டமின்களாகும். ஆட்டோ இம்யூன் உள்ளிட்ட கொடிய நோய்களிடம் இருந்து தற்காத்துக்கொள்வதற்கு இந்த இரண்டு வைட்டமின்களும் உள்ளடங்கி இருக்கும் உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். மழைக்காலம் மற்றும் குளிர்காலத்தில் சர்க்கரைவள்ளிக்கிழங்கு சாப்பிடுவது சளி, இருமல் மற்றும் காய்ச்சல் அபாயத்தை குறைக்கும்.

வைட்டமின் ஏ மற்றும் சி தவிர, சர்க்கரை வள்ளிக்கிழங்கில் வைட்டமின் பி, மாங்கனீசு, பொட்டாசியம் போன்ற பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் அதிகம் இருக்கிறது. இவை ஆரோக்கியமான சருமத்திற்கு தேவையான கொலோஜன் உற்பத்தியை அதிகரிக்கின்றன. எலும்பு தேய்மானம் ஏற்படும் அபாயத்தை குறைக்கின்றன.

நீரிழிவு நோய் இருப்பவர்கள் சர்க்கரைவள்ளிக்கிழங்கு சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் என்பது தவறான கருத்தாகும். சர்க்கரை வள்ளிக்கிழங்கில் ஸ்டார்ச் எதிர்ப்பு பொருள் உள்ளது. இது கார்போஹைட்ரேட்டில் இருந்து கிடைக்கும் ஸ்டார்ச்சை விட வித்தியாசமானது. சர்க்கரை வள்ளிக்கிழங்கில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் அதிலிருக்கும் ஸ்டார்ச் மெதுவாக எரிந்து நீண்ட நேரம் ஆற்றலை அளிக்கும். மேலும் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்காது.

உயர் ரத்த அழுத்த பிரச்சினை கொண்டவர்கள் சர்க்கரை வள்ளிக்கிழங்கு சாப்பிடுவதற்கு தயங்க வேண்டியதில்லை. ஏனெனில் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்துக்கொள்ள உதவும். வேகவைத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கில் வாழைப்பழத்தில் இருப்பதை விட பொட்டாசியம் சத்து அதிகமாக இருக்கும். பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை சீராக்க உதவும். உடலில் இருந்து கூடுதல் சோடியத்தை அகற்றவும் வழிவகை செய்யும். இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News –  யூடியூப் YouTube | [email protected]

Previous Post

அஜித் அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு… ரசிகர்கள் கொண்டாட்டம்

Next Post

யோ-யோ டெஸ்டில் தோல்வியடைந்த இளம் வீரர் பிரித்வி ஷா

Next Post
யோ-யோ டெஸ்டில் தோல்வியடைந்த இளம் வீரர் பிரித்வி ஷா

யோ-யோ டெஸ்டில் தோல்வியடைந்த இளம் வீரர் பிரித்வி ஷா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures